»   »  அரசியலில் குதித்த ரஜினி: விஜய் சேதுபதி, பெரிய சூப்பர் ஸ்டார், ராகவா லாரன்ஸ் என்ன சொல்கிறார்கள்?

அரசியலில் குதித்த ரஜினி: விஜய் சேதுபதி, பெரிய சூப்பர் ஸ்டார், ராகவா லாரன்ஸ் என்ன சொல்கிறார்கள்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியலுக்கு வந்துள்ளது குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

அரசியல் கட்சி துவங்கி வரும் தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார்.

இது குறித்து திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

வாழ்த்து

என் இனிய நண்பர், சக நடிகர், அடக்கமான மனிதர், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த தனது முடிவை அறிவித்துள்ளார்..அவர் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ட்வீட்டியுள்ளார்.

மகிழ்ச்சி

#Rajinikanthpoliticalentry தலைவர் அதிரடி !!!

தமிழ்நாடு எதிர்காலம் - மகிழ்ச்சி .

வெங்கட் பிரபு

பேராசை, கமல் ஹாஸன் சாரையும், ரஜினி சாரையும் ஒரே படத்துல தான் பார்க்க முடியல, ஒரே பார்ட்டில??? புதுக் கட்சிக்கு வாழ்த்துக்கள் தலைவா, 2018 அப்படி இருக்க போகுது!!!

தலைவா

தலைவா நன்றி..! எங்கள் கனவை நினைவாக்கினாய், வரசொன்னோம் வந்துவிட்டாய். இனி நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும். அனைத்து தலைவர் ரசிகர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி....!@superstarrajini

English summary
Bollywood actor Amitabh Bachchan tweeted that, 'My dear friend , my colleague and a humble considerate human, RAJNIKANTH, announces his decision to enter politics .. my best wishes to him for his success !!'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X