»   »  "சூப்பர்ஸ்டார்கிட்ட இருந்து போன் வரும்னு எதிர்பார்க்கவே இல்ல" - நெகிழும் 'பாகமதி' அனுஷ்கா!

"சூப்பர்ஸ்டார்கிட்ட இருந்து போன் வரும்னு எதிர்பார்க்கவே இல்ல" - நெகிழும் 'பாகமதி' அனுஷ்கா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளையே அதிகமாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் அனுஷ்கா. அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்துள்ள படம் 'பாகமதி'. இந்தப் படத்திலும் வித்தியாசமான நடிப்பால் கவர்ந்து இருக்கிறார் அனுஷ்கா.

இந்த படம் தெலுங்கில் ரூ.30 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. எதிர்பார்த்ததை விட இது அதிக வசூல் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் தமிழிலும் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனால் அனுஷ்கா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Rajini praises anushka

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த 'லிங்கா' படத்தில் ஹீரோயின் வாய்ப்பினை பெற்றார் அனுஷ்கா. அதன்பிறகு அவருக்கு மீண்டும் ரஜினியுடன் இணையும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அனுஷ்காவை பாராட்டியுள்ளார் ரஜினி.

தற்போது அனுஷ்கா நடிப்பில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் பாகமதி படத்தை ரஜினியும் பார்த்து ரசித்துள்ளார். அதையடுத்து அனுஷ்காவுக்கு போன் செய்து படத்தையும், அவரது நடிப்பையும் வெகுவாகப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.

இந்தத் தகவலை வெளியிட்டுள்ள அனுஷ்கா, "ரஜினியிடமிருந்து பாகமதி படத்திற்கு பாராட்டு வரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அந்த வகையில், பாகமதி படத்திற்கு எத்தனையோ பாராட்டுக்கள் கிடைத்தபோதும், ரஜினியின் இந்த பாராட்டை சிறந்த பாராட்டாக கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
Rajinikanth recently watched Anushka's 'Bhaagamathie' film. Rajini praised Anushka for acted in this movie and her performance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil