»   »  ரஞ்சித் இயக்கத்தில் நடித்தபோது பாலச்சந்தர் நினைவு வந்தது! - ரஜினி பாராட்டு

ரஞ்சித் இயக்கத்தில் நடித்தபோது பாலச்சந்தர் நினைவு வந்தது! - ரஜினி பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் எப்படி வந்திருக்கும்? இந்தப் படத்தை ரஜினி பார்த்துவிட்டாரா? அவருக்குத் திருப்திதானா? என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அதற்கெல்லாம் பதில் சொல்கிற மாதிரி ஒரு தகவல் வெளிவந்திருக்கிறது.


Rajini praises Ranjith

கபாலி படத்தை ரஜினி பார்த்துவிட்டார். படத்தின் டபுள் பாஸிடிவ் பார்த்தவர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டாராம்.


"என்ன தாணு... இந்தப் படம் இப்படித்தான் வரும்னு நினைச்சிருந்தேன். ச்சும்மா அப்டி இருக்கு படம்... பென்டாஸ்டிக்" என்று மகிழ்ச்சியோடு பாராட்டியுள்ளார் ரஜினி.


அதோடு தன்னைப் பற்றி ரஜினி சொன்னதை அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம் ரஞ்சித்.


"முன்னாடி எல்லாம் பாலச்சந்தர் சார் என்னை நடிக்க வச்சி வேலை வாங்குவார். அதன்பிறகு நான் நடிச்ச படங்களில் எல்லாம் டைரக்டர்கள் என்ன சொன்னார்களோ அதைக் கேட்டு அப்படியே நடிச்சேன். அவ்வளவுதான். இப்போ ‘கபாலி'யில் என்னிடம் ரஞ்சித் வேலை வாங்கியதைப் பார்த்தபொழுது எனக்கு பாலச்சந்தர் ஞாபகம் வந்துவிட்டது," என்றாராம் தாணுவிடம் ரஜினி.


கபாலி டீசர் 16 மில்லியன் பார்வைகளுடன் இணையத்தைக் கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth has praised his Kabali director Ranjith for his capability and skills.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil