Coolie: நண்பர்களைப் பிரித்த ரஜினிகாந்த்.. கூலி படத்தில் கமிட் ஆனதும் போட்ட முதல் கண்டிஷன் அதுதானா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள கூலி படம் உலகம் முழுவதும் ஓடிக் கொண்டு உள்ளது. படத்திற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும் சினிமா ரசிகர்கள் மத்தியில் படம் அடிமேல் அடி வாங்கிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் கூலி படத்தில் கமிட் ஆனாது, ரஜினி போட்ட முதல் ஆர்டர் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதாவது படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜையும் அவரது நண்பர் இயக்குநர் மற்றும் கதை ஆசிரியர் ரத்ன குமாரையும் பிரித்து விட்டார் என்று பேச்சுகள் எழுந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தில் நாகர்ஜுனா, உபேந்திரா, ஆமிர் கான், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும், காலகட்டத்தில் கூலி படம் வெளியாகி உள்ளது. இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கடந்த 50 ஆண்டுகளில் 171 படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த படம் உருவானதால் ரசிகர்கள் பலருக்கும் இந்த படம் லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்கிறதா அல்லது ஸ்டாண்ட் அலோன் படமா என்ற கேள்வி இருந்தது. ஆனால், லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் விஜய்யின் லியோ படம் இருப்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அந்தப் பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டார். இது மட்டும் இல்லாமல், படம் வெற்றி பெற்றால் விஜய் ரசிகர்கள் தயவால் படம் வெற்றி என்ற பேச்சு ஆளாகி விடக்கூடாது என்பதில் ரஜினி மிகவும் கவனமாக இருந்திருப்பார் என கூறப்படுகிறது. அதனால்தான் கூலி ஸ்டாண்ட் அலோன் படமாக வெளிவந்துள்ளது எனவும் கூறுபவர்கள் இருக்கிறார்கள்.
ரஜினி போட்ட கண்டிஷன்: இந்நிலையில் தற்போது திரையுலகில் ரஜினி குறித்து வேகமாக பரவி வரும் தகவல், கூலி படத்தில் கமிட் ஆனதும் ரஜினி போட்ட முதல் கண்டிஷன் இந்த படத்தில் லோகேஷ் கனகராஜின் நண்பரும் இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான ரத்னகுமார் இந்த படத்தில் பணியாற்ற கூடாது என்று சொல்லிவிட்டாராம். அதற்கு காரணம், விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட இணையதள வாக்கு வாதத்தில் ரஜினியை ரத்னகுமார் விமர்சித்து பேசியது ரஜினிக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். அதனால் அவருக்கு ஏற்பட்ட அப்செட்டில் தான் ரஜினிகாந்த், கூலி படத்தில் ரத்னகுமார் வேலை செய்யக் கூடாது எனக் கூறிவிட்டார் என்று பேசிவருகிறார்கள்.

ரத்னகுமார்: கூலி படத்தின் மொத்த வேலைகளும் முடிய சுமார் இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த இரண்டு ஆண்டுகளில் ரத்னகுமார் தனது இயக்கத்தில் படம் எடுக்க ஒரு கதையை பக்காவாக ரெடி செய்துவிட்டாராம். இந்த படம் எல்.சில்.யூவில் வரும் எனவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலி படத்திற்காக நண்பர்களை பிரித்துவி ட்டாரே என்று இணையவாசிகள் விமர்சித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, கைதி 2 படத்தில் இணைந்து பணியாற்ற லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்னகுமார் மீண்டும் கை கோர்த்து விட்டார்கள்.


Click it and Unblock the Notifications











