»   »  கடைசி படம் முதல்வன் 2... ராஜமௌலியுடன் கைகோர்க்கிறார் ரஜினி? #Mudhalvan2

கடைசி படம் முதல்வன் 2... ராஜமௌலியுடன் கைகோர்க்கிறார் ரஜினி? #Mudhalvan2

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டே, 2.ஓ, காலா படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

காலாதான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்றும், அதற்குப் பிறகு முழு நேர அரசியல்வாதியாகிவிடுவார் ரஜினி என்றும் கூறப்பட்டது. ஆனால் காலாவுக்குப் பிறகு ஒரு படம் மட்டும் நடிப்பார் என்று இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Rajini, Rajamouli, Mudhalvan 2?

அரசியல் கட்சியை அறிவித்த பிறகு, கடைசியாக ஒரு படத்தில் மட்டும் நடிக்கத் திட்டமிட்டுள்ளாராம் ரஜினி. அது ஏ ஆர் முருகதாஸ் படம் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால் முதல்வன் 2 படத்தில் நடிக்க ரஜினி விருப்பமாக இருப்பதாகவும் அதற்கான கதையை ராஜமௌலியின் தந்தை உருவாக்கி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை ராஜமௌலி இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

முதல்வன் முதல் பாகம் 1999-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பட்டையைக் கிளப்பியது. அவரே இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அந்த நேரத்தில் இந்தியன் 2-ல் பிஸியாக இருப்பார் என்பதால் ராஜமௌலி இயக்குவார் என்கிறார்கள்.

ராஜமௌலியும் ரஜினியும் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் ஏகோபித்த வேண்டுதலாக இருந்த நிலையில், முதல்வன் 2-ல் இருவரும் இணைந்தால் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு சொல்லவா வேண்டும்!!

English summary
Sources say that Rajinikanth may be joined with director Rajamouli for his last movie Mudhalvan 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil