»   »  'தலைவர் 161'... மே 28-ல் ஆரம்பம்! #Thalaivar161 #Bheemji

'தலைவர் 161'... மே 28-ல் ஆரம்பம்! #Thalaivar161 #Bheemji

Posted By:
Subscribe to Oneindia Tamil

'தலைவர் 161'.... ரஜினிகாந்த் நடிக்கும் பா ரஞ்சித் இயக்கும் புதிய படத்துக்கு இதைத்தான் தலைப்பாக ரசிகர்கள் வைத்திருக்கிறார்கள். சமூக வலைத் தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது இந்தத் தலைப்பு.

ரஜினி 178 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், அவர் கவுரவ வேடங்களில் நடித்த படங்களைக் கழித்துவிட்டால், 160 படங்களில் நடித்துள்ளார். இப்போது பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிப்பது 161வது படம்.

Rajini - Ranjith film to start on May 28th

இந்தப் படம் மும்பையை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

படத்தை வரும் மே 28-ம் தேதி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மற்ற தொழில் நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தப் படத்துக்காக சென்னை அருகில் பிரமாண்ட செட்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

English summary
Rajini - Pa Ranjith's next movie will be floored on May 28th in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil