»   »  ஜூன் 10-ம் தேதி ரஜினியின் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஜூன் 10-ம் தேதி ரஜினியின் புதிய படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வரும் ஜூன் 10-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

லிங்கா படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படம் குறித்து கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

அடுத்தடுத்து படங்கள்

அடுத்தடுத்து படங்கள்

ரஜினி அடுத்த மூன்றாண்டுகளில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கப் போவதாகவும், அதற்கான இயக்குநர்களையும் தயாரிப்பாளர்களையும் அவர் முடிவு செய்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

கலைப்புலி தாணுவுக்கு

கலைப்புலி தாணுவுக்கு

முதலில் அவர் கலைப்புலி தாணுவுக்கு ஒரு படம் நடித்துத் தரப் போகிறார் என்றும், அந்தப் படத்தை மெட்ராஸ் ரஞ்சித் இயக்குவார் என்று செய்தி வெளியானது. ஆனால் படு ரகசியமாக இருந்த இந்த செய்தி, எப்படி வெளியானது என்பது தெரியாமல் ரஜினியும் தாணுவும் அதிர்ச்சி அடைந்தனர்.

அறிவிப்பு இல்லை

அறிவிப்பு இல்லை

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதைத் தள்ளி வைத்தனர். இதற்கிடையில் லிங்கா படப் பிரச்சினை தொடர்ந்து கொண்டிருப்பதால், அது சுமூகமாகவோ, சட்ட ரீதியாகவோ முடியும் வரை காத்திருக்குமாறு கூறிவிட்டார் ரஜினி.

ஜூன் 10ம் தேதி..

ஜூன் 10ம் தேதி..

இப்போது வரும் ஜூன் 10-ம் தேதி ரஜினி - ரஞ்சித் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது. ஜூலை மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

மலேசிய டான்

மலேசிய டான்

இந்தப் படத்தில் மலேசியாவைச் சேர்ந்த டான் வேடத்தில் ரஜினி நடிக்கிறாராம். அவருக்கு ஜோடி இல்லை என்று முதலில் கூறப்பட்டது. இப்போது நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும், ஆனால் அவருக்கும் ரஜினிக்கும் டூயட் காட்சிகள் எதுவும் இருக்காது என்றும் சொல்கிறார்கள்.

English summary
The much expected Rajini - Ranjith movie may be officially announced on June 10th.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil