»   »  ஏப்ரல் 14-ம் தேதி ரஜினி - ரஞ்சித் புதுப் படம் அறிவிப்பு?

ஏப்ரல் 14-ம் தேதி ரஜினி - ரஞ்சித் புதுப் படம் அறிவிப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ரஞ்சித்தும் மீண்டும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

கபாலி படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை மீண்டும் ரஞ்சித்துக்கே கொடுத்தார் ரஜினி. இடைப்பட்ட காலத்தில் ஷங்கரின் 2.ஓ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் சில தின நாட்களில் முடியவிருக்கிறது.

Rajini - Ranjith new movie announcement on April 14th

அதன் பிறகு ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. இந்தப் படம் கபாலியின் தொடர்ச்சி அல்ல.. வேறு கதை என்று ரஞ்சித் அறிவித்துள்ளார்.

புதிய படத்துக்கான திரைக்கதையை முழுவதுமாக எழுதி ரஜினியின் ஒப்புதலையும் ரஞ்சித் பெற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டையொட்டி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது.

English summary
Superstar Rajini - Ranjith's next movie announcement is expecting in coming April 14th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil