»   »  ரஜினி - ரஞ்சித் படம்.... எப்போ தொடங்குது தெரியுமா?

ரஜினி - ரஞ்சித் படம்.... எப்போ தொடங்குது தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கபாலி மெகா வெற்றிப் படத்துக்குப் பிறகு மீண்டும் ரஜினியும் ரஞ்சித்தும் இணையும் படம் குறித்த தகவல்கள் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

இப்போது ஷங்கர் இயக்கத்தில் 2.ஓ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அடுத்த படத்துக்கான திரைக்கதை வேலைகளை முடித்துவிட்ட இயக்குநர் ரஞ்சித், அதை ரஜினியிடம் கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.

Rajini - Ranjith next movie updates

தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் வரும் மே மாதம் தொடங்கும் என முதல் கட்ட தகவல் கசிந்துள்ளது.

கபாலியை விட வித்தியாசமாகவும், அனைத்து ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் இந்தப் படம் அமைய வேண்டும் என மெனக்கெட்டு வருகிறார் ரஞ்சித். இந்தப் படத்துக்காக அவர் மும்பைக்கே போய் தங்கி, திரைக்கதை வேலையைப் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடைபெற்று வரும் 2.ஓ' படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து, ரஜினி-பா.ரஞ்சித் இணையும் படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்குகிறது.

English summary
Director Pa Ranjith has completed the script work for his next movie with Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil