»   »  ஜூலை 24-ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்?

ஜூலை 24-ம் தேதி சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் ஜூலை 24-ம் தேதி அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாத இறுதியில் ஓய்வுக்காக அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அவர் அமெரிக்காவில் தங்கியிருந்தார்.

இடையில் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாக வதந்திகள் பரவின. ஆனால் அவர் ஓய்வெடுப்பதாகவும், அவரது குரு சச்சிதானந்தா சுவாமிகளின் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாவும் தகவல்கள் கிடைத்தன.

Rajini to return Chennai on July 24th?

கடந்த இரு தினங்களாக அமெரிக்காவில் ரஜினி இருக்கும் படங்கள் மீடியாவில் வெளியாகின.

கபாலி வெளியாவதற்கு முன்பே ரஜினி சென்னை வருவார் என்று சிலர் எழுதினர். ஆனால் ஒன்இந்தியா தமிழ், சில வாரங்களுக்கு முன்பே, கபாலி வெளியீட்டுக்குப் பிறகுதான் ரஜினி சென்னை வருகிறார் என்பதை உறுதியாகக் கூறியது நினைவிருக்கலாம்.

அதன்படி, கபாலி வெளியாகி இரு தினங்களுக்குப் பிறகு ரஜினி சென்னை திரும்புவார் என அவருக்கு நெருக்கமான சிலர் தகவல் தெரிவித்துள்ளனர்.

English summary
Close sources to Rajinikanth says that the superstar may be returned to Chennai on July 24th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil