»   »  மும்பை ஷூட்டிங் ஓவர்... சென்னை திரும்பினார் ரஜினி!

மும்பை ஷூட்டிங் ஓவர்... சென்னை திரும்பினார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காலா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்.

பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா கரிகாலன் படப்பிடிப்பு கடந்த மாதம் மும்பையில் தொடங்கியது.

வடாலா மற்றும் தாராவி பகுதிகளில் மக்கள் மத்தியில் நடந்த இந்த படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்று நடித்தார்.

Rajini returns to Chennai

கிட்டத்தட்ட 10 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார் ரஜினி.

விமான நிலையத்தில் அவரைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் மற்றும் செய்தியாளர்கல் காத்திருந்தனர்.

காலா படத்தின் மீதிக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு அடுத்த சில தினங்களில் மீண்டும் மும்பையில் தொடங்குகிறது. ஜூன் 24 ம் தேதி முதல் மீண்டும் மும்பை படப்பிடிப்பில் பங்கேற்கிறார் ரஜினி. அதன் பிறகு சென்னை அருகே பூந்தமல்லியில் மீதிக் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

English summary
Superstar Rajinikanth has returned from Kaala shooting to Chennai today
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil