»   »  இன்னும் இரு வாரங்களில் சென்னை திரும்புவார் ரஜினி!- கலைப்புலி தாணு தகவல்

இன்னும் இரு வாரங்களில் சென்னை திரும்புவார் ரஜினி!- கலைப்புலி தாணு தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோடை விடுமுறையைக் கழிக்கவும் 2.ஓ படத்தின் முக்கிய பணிகளுக்காகவும் அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ஜூன் மாதம் இறுதி வாரத்தில் சென்னை திரும்புகிறார்.

இந்தத் தகவலை கபாலி படத்தின் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த மாதம் சென்ற அவர், அமெரிக்காவில் தனது ஓய்வைக் கழித்து வருகிறார். அதே நேரம் 2.ஓ படத்துக்கான சில முக்கிய வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.

Rajini returns Chennai in June last week

ஆனால் மீடியாவில்ர ஜினிகாந்த் உடல் நிலைப்பற்றி வதந்திகள் பரவ ஆரம்பித்தன.

டாக்டர்கள் அறிவுரைப்படி அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக இணையதளங்களில் வதந்பதிகள் பரவி வருகின்றன. இதனால் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தகவல் உண்மைதானா? என்று ஒருவருக்கொருவர் விசாரித்த வண்ணம் இருந்தார்கள்.

ரஜினிகாந்த் தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் சென்னை திரும்புவார் என்று கூறப்பட்டது. ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, ரஜினியுடன் எடுத்துக் கொண்ட செல்பி படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, அப்பாவுடன் அமெரிக்காவில் விடுமுறையை இனிமையாகக் கழிப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ‘கபாலி' பட தயாரிப்பாளர் எஸ்.தாணு இது குறித்து கூறும்போது, ‘‘ரஜினிகாந்த் ‘2.0' பட வேலையாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் நலமுடன் இருக்கிறார். நேற்று முன்தினம் கூட என்னுடன் போனில் பேசினார். இரண்டு வாரத்தில் அவர் சென்னை திரும்புவார். கபாலி படத்தின் பாடல்களை இணையதளத்தில் நேரடியாக நாளை வெளியிடுகிறோம்,'' என்றார்.

English summary
Producer Kalaipuli Thanu says that Rajinikanth will be return to Chennai in the last week of June.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil