twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலா விழாவில் ரஜினி சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு பதறி கதறிய ரசிகர்கள்

    By Siva
    |

    Recommended Video

    நதி நீர் இணைப்பதை பற்றி ரஜினிகாந்த்- வீடியோ

    சென்னை: காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு அவரது ரசிகர்கள் பதறிவிட்டனர்.

    பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது,

    வெற்றி

    வெற்றி

    இது இசை வெளியீட்டு விழா போன்றே இல்லை. மாறாக படத்தின் வெற்றி விழா போன்று உள்ளது. சிவாஜி பட வெற்றியை கொண்டாடியபோது கருணாநிதி அவர்கள் வந்து பேசினார்கள். அவர் பேச்சை விரும்பும் பலரில் நானும் ஒருவன். அவர் குரலை விரைவில் கேட்க பிரார்த்தனை செய்கிறேன்.

    உடல்

    உடல்

    எனக்கு உடல்நலம் சரியில்லாததால் எந்திரன் வெற்றியை கொண்டாடவில்லை. உடலையும், மனதையும் நன்றாக வைத்திருந்தால் சீக்கிரம் குணமடைவீர்கள் என்று கூறினார்கள். எனக்கு நடிப்பை தவிர வேது எதுவும் தெரியாது.

    அதிபுத்திசாலிகள்

    அதிபுத்திசாலிகள்

    புத்திசாலிகளுடன் பழகலாம், அறிவுரை கேட்கலாம். ஆனால் அதிபுத்திசாலிகளிடம் ஆலோசனை கேட்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் பல யோசனை, திட்டங்கள் வைத்திருப்பார்கள்.

    தண்ணீர்

    தண்ணீர்

    லிங்கா கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏனென்றால் தண்ணீர். தண்ணீர் பஞ்சம், நதி என்பதால் என்னை அறியாமலேயே அதில் ஒரு ஈடுபாடு வந்தது. தண்ணீரில்லாமல் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்காக ஒரு அணை கட்ட வேண்டும் என்கிற கதாபாத்திரம். நதிகளை இணைக்க வேண்டும் என்பது என் ஆசை.

    கங்கை

    கங்கை

    நான் இமய மலைக்கு போவதே அந்த கங்கையை பார்க்கத் தான். கங்கையை பார்க்க அற்புதமாக இருக்கும். என் வாழ்க்கையில் ஒரே கனவு நதிகள் இணைப்பு. தென்னிந்திய நதிகளை இணைத்துவிட்டால் மறுநாளே நான் கண்ணை மூடினால் கூட பரவாயில்லை என்றார் ரஜினி. ரஜினி தனது மரணத்தை பற்றி பேசியதும் ரசிகர்கள் பதட்டம் அடைந்து தலைவா அப்படி சொல்லாதீங்க என்று அலறினார்கள்.

    English summary
    Rajinikanth said in Kaala audio launch that he doesn't mind leaving the world the day all South Indian rivers are connected.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X