»   »  முதல் காதலி... நட்சத்திர விழாவில் ரஜினி பகிர்ந்துகொண்ட சுவாஸ்யம்!

முதல் காதலி... நட்சத்திர விழாவில் ரஜினி பகிர்ந்துகொண்ட சுவாஸ்யம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நிறைவேறாத ரஜினியின் முதல் காதல்..!!- வீடியோ

நட்சத்திர விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேச்சுதான் ஹைலைட்டாக அமைந்தது. நடிகர் விவேக் சூப்பர் ஸ்டாரை பேட்டி எடுத்தார். ஆனால் அதற்கு முன்பாக நடிகை லதா மேடைக்கு வந்து ரஜினியிடம் கேள்வி கேட்டார்.

நடிகை லதா ரஜினியிடம், "முதலில் உங்கள் மனைவி லதா சொன்ன ரகசியம் உங்களுக்கு சரித்திர கதைகள், புத்தகங்கள் பிடிக்கும் என்பது. எனவே சரித்திர புத்தகத்தையே பரிசாக கொண்டு வந்துள்ளேன்' என்று சொல்லிவிட்டு ரஜினியிடம் முதல் காதல் பற்றி சொல்ல முடியுமா? என்று கேட்க ரஜினியின் முகத்தில் இலேசான வெட்கப் புன்னகை.

Rajini reveals his first love

அந்த வெட்க புன்னகையை பார்த்ததும் மைதானமே அதிர்ந்தது. "இருந்துச்சு. காலேஜ் படிக்கும்போது. ஆனா அது நிறைவேறலை" என்று பதிலளித்தார். அவங்க பேர் ஞாபகம் இருக்கா? என்று கேட்கப்பட்டதற்கு "மறக்க முடியுமா...?" என்று தனக்கே உரிய ஸ்டைலில் சிரித்தார் சூப்பர் ஸ்டார். ஆனால் எவ்வளவு கேட்டும் பெயரைச் சொல்லவில்லை.

அது சரி... அந்த கேள்வியும் லதா ரஜினிகாந்த் கேட்கச் சொன்னதா லதா மேடம்?

English summary
Suuper Star Rajinikanth has revealed about his first love in Malaysia star function.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X