»   »  'வேங்கை மகன், ஒத்தைல நிக்கேன்... தில்லிருந்து மொத்தமா வாங்கலே!' - நெல்லைத் தமிழில் கர்ஜிக்கும் ரஜினி

'வேங்கை மகன், ஒத்தைல நிக்கேன்... தில்லிருந்து மொத்தமா வாங்கலே!' - நெல்லைத் தமிழில் கர்ஜிக்கும் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் அரசியலா காலா டீசர்?- வீடியோ

சென்னை: காலா படம் முழுக்க முழுக்க கற்பனைக் கதை அல்ல. மும்பையில் வாழ்ந்த தமிழ் தலைவர் ஒருவரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு கதை. நெல்லையைச் சேர்ந்த அந்த தலைவரின் பாத்திரம்தான் ரஜினி ஏற்றிருப்பது.

ரஜினி ஸ்லாங்

ரஜினி ஸ்லாங்

அந்தப் பாத்திரத்தின் இயல்புப்படி நெல்லைத் தமிழில் பேச வேண்டும். ரஜினியைப் பொறுத்தவரை சென்னை, மதுரை வட்டார தமிழில் அவர் படங்களில் பேசியிருந்தாலும், அதை படம் நெடுகிலும் பேசியதில்லை. சில காட்சிகளில் மட்டும் பேசியிருப்பார். மற்றபடி, தனக்கே உரிய 'ரஜினி ஸ்லாங்'தான் அவர் பாணி.

நெல்லைத் தமிழ்

நெல்லைத் தமிழ்

ஆனால் காலாவைப் பொறுத்தவரை ரஜினி பெரும்பாலும் நெல்லை வட்டார வழக்கு மொழியில் பேசியிருப்பது நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்கிறார் இயக்குநர் ரஞ்சித். கபாலியில் மலேசிய தமிழர்கள் பாணியில் ரஜினியைப் பேச வைத்திருந்தார் ரஞ்சித் என்பது குறிப்பிடத்தக்கது.

வாங்கலே...

வாங்கலே...

இப்போது வெளியாகியுள்ள டீசரிலேயே அதற்கான ஒரு சாம்பிளும் உள்ளது. தனக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கும் எதிரிகளின் ஏரியாவுக்குள்ளேயே அதிரடியாக நுழைந்து, "க்யா ரே... செட்டிங்கா.... வேங்கை மகன்...ஒத்தைல நிக்கேன்... தில்லிருந்தா மொத்தமா வாங்கலே..." என்று கர்ஜிக்கிறார் ரஜினி. பக்காவாக திருநெல்வேலி வழக்கு மொழியில் இந்த வசனத்தை அவர் பேசியுள்ளார்.

பிரமாதம்

பிரமாதம்

தாராவி இந்தியும் நெல்லைத் தமிழும் கலந்துகட்டி பல இடங்களில் வசனம் வைக்கப்பட்டுள்ளதாம்.
அதேபோல, டீசரின் முடிவில் ரஜினி பேசும் வசனம், ரசிகர்களுக்கு ஆயிரம் வோல்ட் மின்சார அதிர்வைக் கொடுக்கும் வகையில் உள்ளது. "இந்த காலாவோட முழு ரவுடித்தனத்தையும் பாத்ததில்லியே... பாப்பீங்க,"!! என்ற அந்த வசனமும் அந்தக் காட்சி அமைப்பும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது.

மீம்ஸ்

இந்தக் காட்சியமைப்பு, வசனங்களை ரஜினியின் இன்றைய அரசியல் பிரவேசம், அதற்கு கிளம்பியுள்ள எதிர்ப்புகள் ஆகியவற்றுடன் பொருத்திப் பார்த்து நெட்டிசன்கள் மீம்களை உருவாக்கித் தாக்கி வருகின்றனர்.

English summary
In Kaala teaser Rajinikanth is roaring in Nellai slang Tamil that steals the heart of viewers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil