»   »  வெளியானது ரஜினியின் 2.0 படத்தின் தலைப்பு டிசைன்‍!

வெளியானது ரஜினியின் 2.0 படத்தின் தலைப்பு டிசைன்‍!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தின் தலைப்பு டிசைன் நேற்று இரவு வெளியானது.

2.0 படம் மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதுவரை படம் குறித்த தகவல்கள், படங்களை ரகசியமாக வைத்திருந்தனர். இப்போதுதான் முதல் முறையாக படத்தின் தலைப்பு டிசைன் வெளியாகியுள்ள.


Rajini's 2.0 title design released

இந்தப் படத்தின் தலைப்பை 2.ஜீரோ என்று படிப்பதா, 2.ஓ என்று படிப்பதா என்ற குழப்பம் ஆரம்பத்திலிருந்தே உள்ளது. இந்தப் படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரஸ் மீட்டில் 2.ஓ என்றுதான் அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன். ஆனால் மீடியாவில் 2.ஜீரோ, 2.ஓ என கலந்து கட்டித்தான் இப்போதும் எழுதி வருகிறார்கள்.


'உண்மையில் படத்தின் தலைப்பு 2.0 ஜீரோதான். ஆனால் மேற்கத்திய நாடுகளில் 2.க்குப்பிறகு ஜீரோ வந்தால் அதை ஓ என்றுதான் உச்சரிப்பார்கள். எனவேதான் 2.ஓ என வாய் மொழியில் குறிப்பிடுகிறார்கள். எழுத்துப்படி அது 2.ஜீரோதான்' என படக்குழுவைச் சேர்ந்த ஒருவர் விளக்கம் தெரிவித்தார்.

English summary
The title design of Rajinikanth's 2.0 has been released yesterday.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil