»   »  ரஜினியின் பிரமாண்ட '2.ஓ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா?

ரஜினியின் பிரமாண்ட '2.ஓ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போ தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான 2.ஓ வின் முதல் தோற்றப் போஸ்டர்களை வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளது லைகா நிறுவனம்.

இந்த அறிவிப்பினை படத்தின் இயக்குநர் ஷங்கர் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajini's 2.O first look in September

ரஜினி நடிப்பில் ரூ 350 கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் '2.ஓ'. படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து, அடுத்த ஷெட்யூல் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவுக்கு ஓய்வு எடுப்பதற்காக சென்ற ரஜினி, சமீபத்தில்தான் சென்னை திரும்பினார். இதையடுத்து, இந்த மாத இறுதியில் '2.ஓ' படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், '2.ஓ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற நவம்பர் மாதத்தில் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதைத் தொடர்ந்து படத்தின் டீசரையும் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வருடத்தில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்து வருகிறார். கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினியின் கபாலி சமீபத்தில் வெளியாகி அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து, வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. கபாலி எளிய கதை. ரஜினியைத் தவிர பிரபல முகம் என்று யாருமில்லை. அந்தப் படமே இந்த அளவுக்கு சாதனைப் படைத்துள்ள நிலையில், இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் - உலக அளவில் பார்வையாளர்கள் கொண்ட இந்தியாவின் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் ரஜினி இருவரும் இணைந்திருக்கும் இந்தப் படத்தின் வியாபாரம், வசூல் குறித்து இப்போதே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது பாக்ஸ் ஆபீஸில்.

English summary
Lyca Productions announced that the first look and teaser of Rajinikanth's 2.O will be released in coming September.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil