»   »  ஆகஸ்டிலும் லேது... தீபாவளி 2018-க்கு தள்ளிப் போகிறதா ரஜினியின் 2.ஓ?

ஆகஸ்டிலும் லேது... தீபாவளி 2018-க்கு தள்ளிப் போகிறதா ரஜினியின் 2.ஓ?

Posted By:
Subscribe to Oneindia Tamil
2.0 இந்த ஆண்டு முடிந்தாலும் வெளிவராது...!!

சென்னை: ரஜினிகாந்தின் பிரமாண்ட படமான 2.ஓ ரிலீஸ் குறித்து மீண்டும் பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன.

இந்தியாவின் அதிக பட்ஜெட் செலவழிக்கப்பட்ட ரஜினிகாந்தின் பிரமாண்ட படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது 2.ஓ படம். லைகா நிறுவனத்தின் தயாரிப்பான இந்தப் படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

ஆனால் தீபாவளிக்கு ஆடியோ மட்டும்தான் வெளியானது. படத்தை 2018 ஜனவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தனர்.

ட்ரைலர் கூட வெளியாகல

ட்ரைலர் கூட வெளியாகல

ஆனால் ஜனவரி 2018-ல் படத்தின் ட்ரைலரைக் கூட அவர்களால் வெளியிட முடியவில்லை. மேலும் தள்ளிப் போனது படம். ஏப்ரலில் ரஜினியின் காலா வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட்

ஆகஸ்ட்

2.ஓ படத்தை ஆகஸ்டில் வெளியிடத் திட்டமிருப்பதாக லைகாவும் இயக்குநர் ஷங்கரும் தெரிவித்தனர். ஆனால் கிராபிக்ஸ் வேலைகளை முடிப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது

ட்ரைலர் லீக்

ட்ரைலர் லீக்

இதற்கிடையில் படத்தின் ட்ரைலர் வேறு லீக்கானதில் செம அப்செட் படக்குழு. இப்போது படத்துக்கு புதிய ட்ரைலரை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஷங்கர்.

தீபாவளிக்காவது...

தீபாவளிக்காவது...

இந்த நிலையில் படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என இப்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேதியிலாவது படம் வருமா என்ற கேள்வியும் கூடவே தொடர்கிறது.

English summary
Sources say that Rajinikanth's 2.O will be hit screens on Diwali 2018.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil