»   »  10 மணி நேரத்தில் 2 மில்லியனைத் தாண்டி 2.ஓ மேக்கிங் டீசர்!

10 மணி நேரத்தில் 2 மில்லியனைத் தாண்டி 2.ஓ மேக்கிங் டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று ரஜினியின் 2.ஓ படத்தின் மேக்கிங் டீசரை வெளியிட்டார் இயக்குநர் ஷங்கர். 1.47 நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த சிறிய முன்னோட்டப் படம் வெளியான அடுத்த நிமிடம் ஆன்லைனைக் கலக்கியது என்றால் மிகையல்ல.

2 மில்லியன்

2 மில்லியன்

வெளியான 10 மணி நேரத்துக்குள் இந்த வீடியோவுக்கு 2 மில்லியன் பார்வைகள் கிடைத்துவிட்டன. கிட்டத்தட்ட 1 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.

லைகாவின் பிரமாண்டம்

லைகாவின் பிரமாண்டம்

லைகா நிறுவனம் ரூ 400 கோடிக்கும் அதிகமாக செலவழித்து உருவாக்கி வரும் படம் 2.ஓ. பெரும் வெற்றிப் பெற்ற எந்திரன் படத்தின் தொடர்ச்சி. இந்தப் படம் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகி வருகிறது.

மேக்கிங் டீசர்

2.ஓ படத்தின் இரண்டு ஸ்டில்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. வேறு எந்த படங்களும், வீடியோக்களும் கசிந்து விடாமல் கவனத்துடன் பார்த்துக் கொண்டார் ஷங்கர். இந்த நிலையில் நேற்று திடீரென படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.

அதிர வைத்த டீசர்

அதன்படி நேற்று மாலை 6 மணிக்கு 1.47 நிமிடம் ஓடக்கூடிய ஒரு டீசரை வெளியிட்டார். அதில் இதுவரை 2.ஓ படத்துக்காக ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன் போன்றவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று காட்டியிருந்தார்.

அமோக வரவேற்பு

அமோக வரவேற்பு

இந்த டீசருக்கு ஆன்லைனில் அமோக வரவேற்பு கிடைத்தது. 10 மணி நேரத்துக்குள் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் மற்றும் 99 ஆயிரம் லைக்குகள் கிடைத்தன. ஒரு மேக்கிங் டீசருக்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை

English summary
Rajini's 2.O making teaser is getting rousing response online and setting a new record in youtube

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil