»   »  தெலுங்கில் புதிய சாதனைப் படைத்த ரஜினியின் 2.ஓ!

தெலுங்கில் புதிய சாதனைப் படைத்த ரஜினியின் 2.ஓ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு நேரடி பிரமாண்ட தெலுங்குப் படத்துக்கு இணையாக விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளது ரஜினி - ஷங்கரின் 2.ஓ படம்.

இந்தப் படத்தின் தெலுங்கு உரிமை ரூ 81 கோடிக்கு விலை போயுள்ளது.

லைகா

லைகா

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 2.ஓ. லைகா புரடொக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

ரூ 400 கோடி

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் 2.ஓ படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினியின் புதிய கெட்டப் ரசிகர்களை உற்சாகமடைய வைத்திருக்கிறது.

தெலுங்கு உரிமை

தெலுங்கு உரிமை

இந்த படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு விநியோக உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் பெற்றுள்ளது. ரூ.81 கோடி கொடுத்து இந்த உரிமையை அந்நிறுவனம் பெற்றுள்ளது. எந்திரன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் ரூ.27 கோடிக்கு விலை போயிருந்தது நினைவிருக்கலாம்.

தொலைக்காட்சி

தொலைக்காட்சி

ஏற்கனவே 2.ஓ படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ.110 கோடிக்கு விலைபோனது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாகிறது.

English summary
Rajinikanth's magnum opus 2.O Telugu rights sold out for a record Rs 81 cr.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil