கமலின் விக்ரம் படம் பார்த்தாரா ரஜினி...படம் பற்றி ரஜினி சொன்ன அந்த 3 வார்த்தை

சென்னை : கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். ஆனால் இந்த படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்தாரா, படம் பற்றி என்ன கமெண்ட் கொடுத்தார் என்பதை பலரும் கேட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசானது. உலகம் முழுவதும் 4 மொழிகளில் 5000 தியேட்டர்களில் இந்த படம் ரிலீசானது. ரிலீசான முதல் நாளில் உலகம் முழுவதும் 30 கோடிகளை வசூல் செய்த விக்ரம் படம், சென்னையில் ரஜினியின் அண்ணாத்த படம் வசூல் செய்த 1.71 கோடியை எட்டியது.

சூப்பர் ஹிட் கூட்டணி

சூப்பர் ஹிட் கூட்டணி

விஜய் - அஜித் ரசிகர்கள், மோதிக் கொள்வதை போலவே, ரஜினி - கமல் ரசிகர்களும் இன்று வரை மோதிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் ரஜினியும் கமலும் 45 ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதை பல தருணங்களில் அவர்கள் நிரூபித்தும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் ரஜினி - கமல் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி உள்ளன.

கமலுக்கு வில்லனான ரஜினி

கமலுக்கு வில்லனான ரஜினி

ரஜினி அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்திலேயே கமல் தான் ஹீரோவாக நடித்திருந்தார். கமல் நடித்த மூன்று முடிச்சு போன்ற பல படங்களில் ரஜினி தான் வில்லன் ரோலில் நடித்திருந்தார். பிறகு இருவரும் பேசி தான், இனி ஒன்றாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்து, தனித்தனி படங்களில் நடிக்க துவங்கினர். இருவருமே இரு பெரும் நட்சத்திரங்களாக இந்திய சினிமாவில் வளர்ந்துள்ளனர். இதை இருவருமே பல மேடைகளில் வெளிப்படுத்தி உள்ளனர்.

 இருவரும் எப்போது ஒன்று சேர்வார்கள்

இருவரும் எப்போது ஒன்று சேர்வார்கள்

ரஜினி - கமலை மீண்டும் ஒன்றாக சேர்த்து ஒரு படத்தையாவது எடுத்து விட வேண்டும் என பல டைரக்டர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ரசிகர்களும் இந்த இரு பெரும் ஸ்டார்கள் மீண்டும் இணைந்து ஒரு படத்திலாவது நடிக்க மாட்டார்களா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் ரஜினி - கமல் எப்போது சந்தித்து கொண்டாலும் அந்த போட்டோக்கள், செம டிரெண்டாகி விடுகின்றன. அப்படி சமீபத்தில் விக்ரம் பட ரிலீசிற்கு முன் தனது நண்பர் ரஜினியை சந்தித்து விட்டு வந்தார் கமல்.

விக்ரம் படம் பார்த்தாரா ரஜினி

விக்ரம் படம் பார்த்தாரா ரஜினி

சமீபத்தில் மாநாடு, கேஜிஎஃப் 2, சிவகார்த்திகேயன் நடித்த டான் போன்ற பல படங்களை பார்த்து விட்டு ரஜினி தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அதுவும் டான் படத்தை பார்த்து விட்டு கடைசி 30 நிமிடங்கள் தன்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறி இருந்தார் ரஜினி. அப்படிப்பட்டவர் தனது நண்பர் கமல் நடித்த, அதுவும் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்த விக்ரம் படத்தை பார்த்தாரா, படம் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரஜினி சொன்ன 3 வார்த்தை

ரஜினி சொன்ன 3 வார்த்தை

லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின் படி, ரஜினியும் கமல் நடித்த விக்ரம் படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்து விட்டு மூன்றே வார்த்தையில் தனது கமெண்ட்டை சொல்லி இருக்கிறார். சூப்பர்...சூப்பர்...சூப்பர் என்பது தான் அந்த மூன்று வார்த்தையாம். ரஜினியின் இந்த கமெண்டை ரஜினி, கமல் இருவரின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X