»   »  அழக் கூடாது தம்பி: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அட்வைஸ்

அழக் கூடாது தம்பி: சிவகார்த்திகேயனுக்கு ரஜினி அட்வைஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னை சிலர் மிரட்டுவதால் அழுத சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் செய்து அறிவுரை வழங்கியுள்ளாராம்.

தன்னை சிலர் மிரட்டுவதாகக் கூறி நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ சக்சஸ் மீட்டில் அழுதார். கவலைப் படாதீங்க சிவா கடவுள் இருக்கிறார் என்று சிம்பு ஆறுதல் கூறினார்.

Rajini's advice to Sivakarthikeyan

சிவகார்த்திகேயன் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார். மேலும் பல பிரபலங்களும் சிவாவுக்கு போன் செய்து ஆறுதல் கூறியுள்ளார்களாம்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவாவுக்கு போன் செய்து பேசியுள்ளாராம்.

போனில் ரஜினி கூறியதாக கூறப்படுவதாவது,

இது மாதிரி பிரச்சனைகளை எல்லாம் நினைத்து நினைத்து கவலைப்படாமல் மறந்துவிட வேண்டும். குடும்பத்துடன் ஒரு 10 நாட்களுக்கு வெளிநாட்டுக்கு சென்று வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும் என்றாராம்.

English summary
Rajinikanth reportedly advised Sivakarthikeyan not to take any thing to heart and cry. He even asked Siva to go abroad with family and relax.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil