அண்ணாத்த தீபாவளிக்கு ரெடி...எப்போ ஷுட்டிங் முடியுது தெரியுமா

சென்னை : ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். தான் நடிக்க வேண்டிய பகுதிகள், டப்பிங் என தன் பங்கு வேலைகள் அனைத்தையும் முடித்து விட்டார் ரஜினி. கதைப்படி இந்த படத்தில் கிராமத்து தவைராக ரஜினி நடிக்கிறாராம்.

இந்த படத்தில் முக்கிய ரோல்களில் நடிக்கும் குஷ்பு, மீனா ஆகியோரும் டப்பிங் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்து விட்டனர். மற்றவர்களும் அடுத்தடுத்து தங்கள் வேலைகளை மும்முரமாக முடித்து வருகின்றனர்.

இறுதிக்கட்டத்தில் அண்ணாத்த

இறுதிக்கட்டத்தில் அண்ணாத்த

லேட்டஸ்ட் தகவலின்படி, மிகப் பெரிய பட்ஜெட்டில் குடும்ப ஆக்ஷன், பொழுதுபோக்கு படமாக உருவாகி உள்ள அண்ணாத்த படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாம். திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால் ஆகஸ்ட் இறுதி வாரத்துடன் படத்தின் ஷுட்டிங் முழுவதும் முடிவடைய உள்ளதாம்.

போஸ்ட் ப்ரொடக்ஷனும் ஆரம்பிச்சாச்சா

போஸ்ட் ப்ரொடக்ஷனும் ஆரம்பிச்சாச்சா

இன்னும் முடிக்கப்பட வேண்டிய மீதமுள்ள காட்சிகள் எடுக்கும் வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம். இதோடு ப்ரொடக்ஷன் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும் கவனித்து வருகிறாராம் டைரக்டர் சிவா.

விறுவிறுப்பான அண்ணாத்த

விறுவிறுப்பான அண்ணாத்த

படத்தை தீபாவளி நாளான நவம்பர் 4 அன்று தியேட்டரில் ரிலீஸ் செய்ய உள்ளதாக சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்து விட்டது. இதனால் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்த படக்குழு இரவு, பகலாக வேலை செய்து வருகிறதாம்.

இவங்கெல்லாம் நடிக்கிறாங்களா

இவங்கெல்லாம் நடிக்கிறாங்களா

அஜித்தை வைத்து வீரம், விஸ்வாசம் படங்களை இயக்கிய சிவா, தற்போது நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி உள்ளார்.

அண்ணாத்த பாடல்களும் ஹிட்

அண்ணாத்த பாடல்களும் ஹிட்

விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இமான் தான் அண்ணாத்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். விஸ்வாசம் படத்தில் இவர் இசையில் உருவான கண்ணான கண்ணே, அடிச்சு தூக்கு போன்ற பாடல்கள் யூட்யூப்பில் புதிய சாதனையே படைத்து விட்டன. அதனால் அண்ணாத்த பாடலும் வேற லெவலில் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ட்ரோ பாடல் இவர் பாடிருக்காரா

இன்ட்ரோ பாடல் இவர் பாடிருக்காரா

அண்ணாத்த படத்தில் மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால், இந்த படத்தில் ரஜினிக்கான இன்ட்ரோ பாடலை மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தான் பாடி உள்ளார். படப்பிடிப்பு முழுவதும் முடிந்த உடன் அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து வெளியிட்டு, ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X