கோயில் கோயிலாக சுற்றும் ரஜினி மகள்... ஏன் என்னாச்சு?

சென்னை : ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் டைரக்டர், பின்னணி பாடகி, டப்பிங் கலைஞர் என பல முகங்களைக் கொண்டவர். இவர் 2004 ம் ஆண்டு தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

திருமணத்திற்கு முன் டைரக்டர் ரமணா இயக்கிய படத்தில் தேவா இசையில் பாடி பாடகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா. ஆனால் அந்த படம் ரிலீஸ் செய்யப்படவில்லை. அதைத் தொடர்ந்து விசில் படத்தில் இமான் இசையில் சிம்புவுடன் இணைந்து நட்பே நட்பே என்ற பாடலை பாடினார்.

டைரக்டர் அறிமுகம்

டைரக்டர் அறிமுகம்

கணவர் தனுஷை வைத்து 3 படத்தை இயக்கி டைரக்டராகவும் அறிமுகமானார் ஐஸ்வர்யா. அனிருத் இந்த படத்திற்காக இசையமைத்த ஒய் தி கொலவெறி பாடல் மிகப் பெரிய ஹிட் ஆனது.3 படத்தை தொடர்ந்து வை ராஜா வை படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. சில டாக்குமென்ட்ரிகளையும் இவர் இயக்கி உள்ளார்.

பாடகியான ஐஸ்வர்யா

பாடகியான ஐஸ்வர்யா

செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உன் மேல ஆச தான் பாடலை பாடியவர் ஐஸ்வர்யா தனுஷ் தான். இந்த படத்தில் ரீமா சென்னிற்காக டப்பிங் பேசியதும் ஐஸ்வர்யா தனுஷ் தான்.

ஃபிட்னஸ் ஃபோட்டோஸ்

ஃபிட்னஸ் ஃபோட்டோஸ்

சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவான ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் ஃபோட்டோக்கள், வீடியோக்கள், சைக்கிளிங் போவது, யோகா செய்வது போன்ற ஃபிட்னஸ் சம்பந்தமான ஃபோட்டோக்கள், வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இவரின் ஃபிட்னஸ் பழக்கத்தை பார்த்து பலர் மிரண்டு, பாராட்டி உள்ளனர்.

திடீர் ஆன்மிக பயணம்

திடீர் ஆன்மிக பயணம்

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கோயில் கோயிலாக சென்று வழிபாடு செய்து வரும் ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகிறார் ஐஸ்வர்யா. கடந்த வாரம் திருப்பதி, திருச்செந்தூர், திருத்தணி ஆகிய கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்ததாக ஃபோட்டோக்களை பகிர்ந்திருந்தார் ஐஸ்வர்யா. இதை பார்த்து விட்டு ரசிகர்கள் பலரும் ரஜினி எப்படி இருக்கார். தலைவர் தனுஷை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என கமெண்ட் செய்திருந்தனர்.

குறைத்து மதிப்பிடாதீர்கள்

குறைத்து மதிப்பிடாதீர்கள்

இதைத் தொடர்ந்து நேற்று அம்மன் கோயில் ஒன்றில் வழிபாடு நடத்திய ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதோடு, பிரார்த்தனை செய்வதனால் கிடைக்கும் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள். மொத்தமாக சரணடைந்து விட்டால் அம்மனின் ஆற்றலை உங்களால் முழுவதுமாக உணர முடியும் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.

ஏன் என்னாச்சு

ஏன் என்னாச்சு

இதை பார்த்த ரசிகர்கள் பலர் அண்ணாத்த படத்தில் ரஜினி பேசும், நியாயமும் தைரியமும் ஒரு பொம்பளை பிள்ளைக்கு இருந்தால் அந்த சாமியே வந்து துணையாய் நிற்கும் என்ற டயலாக்கை கமெண்ட்டாக பதிவிட்டுள்ளனர். பலர், என்னாச்சு திடீரென இப்படி கோயில் கோயிலாக சென்று வழிபாடு செய்து வருகிறீர்கள் என கவலையுடன் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X