»   »  எந்திரன் 2 வை 3D யில் எடுக்கப் போகிறாரா ஷங்கர்?

எந்திரன் 2 வை 3D யில் எடுக்கப் போகிறாரா ஷங்கர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் எந்திரன் 2 படத்தைப் பற்றி நாளொரு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது இந்த செய்தி.

அதாவது கோலிவுட்டில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவெடுக்கப் போகும் எந்திரன் 2 படத்தை முழுவதும் 3D யில் சுட்டுத் தள்ள ஷங்கர் திட்டமிட்டு இருப்பதாக கூறுகின்றனர்.

இதுநாள் வரையில் ஹீரோயின் தேர்வு மற்றும் வில்லன் தேர்வு சம்பந்தமான செய்திகள் படத்தைப் பற்றி வெளியான நிலையில் தற்போது புதிய செய்தியாக 3D முறையில் எந்திரன் 2 வை ஷங்கர் எடுக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

எந்திரன் 2

எந்திரன் 2

5 வருடங்களுக்கு முன் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற எந்திரன் படத்தின் 2 வது பாகத்தை எடுக்கும் முயற்சியில் இயக்குநர் ஷங்கர் தற்போது தீவிரமாக களமிறங்கியிருக்கிறார்.ரஜினி தற்போது ரஞ்சித்தின் கபாலி படத்தில் நடித்து வருகிறார் இதனை முடித்து விட்டு அடுத்ததாக எந்திரன் 2 படத்தில் நடிக்கவிருக்கிறார். அநேகமாக அடுத்த வருடம் எந்திரன் 2 வின் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்று கூறுகின்றனர்.

வில்லன் யாரு

வில்லன் யாரு

அதற்குள் படத்தின் மற்றப் பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஷங்கர் உள்ளாகியிருக்கிறார் ஆனால் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் படத்தின் வில்லனை ஷங்கரால் இன்னும் தேர்வு செய்ய முடியவில்லை. வில்லனாக ஷாரூக்கான் தொடங்கி அமீர்கான், விக்ரம் என்று பலரின் பெயர்களும் அடிபட்டு தற்போதுதான் ஓய்ந்திருக்கிறது.

அர்னால்ட்

அர்னால்ட்

இந்நிலையில் டெர்மினேட்டர் நாயகன் அர்னால்டை இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் 100 கோடி கேட்பதால் தான் அவரை இன்னும் ஒப்பந்தம் செய்ய முடியவில்லை என்றும் கூறுகின்றனர். இதற்கிடையே அர்னால்டை வில்லனாக்கினால் உலகம் முழுவதும் கல்லா கட்டலாம்,அதனால் அர்னால்ட்டையே வில்லனாக படத்திற்கு போட்டுவிடலாம் என்று தயாரிப்புத் தரப்பு இறங்கி வந்திருக்கிறதாம்.

ஹீரோயின்

ஹீரோயின்

படத்தின் வில்லனைப் போல ஹீரோயின் தேர்வும் நீண்டு கொண்டே செல்கிறது முதலில் காத்ரீனா கைப் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. தற்போது தீபிகா படுகோனேவை மீண்டும் ரஜினியுடன் ஜோடி சேர்க்க படக்குழு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறுகின்றனர்.

எந்திரன் 2 3D

எந்திரன் 2 3D

இந்நிலையில் ஹீரோயின், வில்லன் பற்றி வந்த தகவல்கள் பழசு என்று சொல்வதுபோல ஷங்கர் இந்தப் படத்தை 3Dயில் எடுக்கப் போகிறார் என்று புதிய செய்திகள் வெளியாகி உள்ளன.இதற்கு முன்னர் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் முதன்முதலாக உருவாகிய சிவாஜி படத்தை ரஜினியின் 60 வது பிறந்த நாளில் 3Dயில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று எந்திரன் 2 வும் 3Dயில் உருவாகுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்....

  English summary
  Latest Buzz in Kollywood Director Shankar to Shoot Endhiran 2 in 3D Format. the Movie is Expected go on Floors from January and Rajinikanth join the team in february after completing Ranjith's Kabali.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil