»   »  மழையால் தள்ளிப் போகும் எந்திரன் 2 அறிவிப்பு?

மழையால் தள்ளிப் போகும் எந்திரன் 2 அறிவிப்பு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் எந்திரன் 2 படத்தின் தொடக்க விழா மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகியவை தள்ளிப் போகலாம் என்று கூறுகின்றனர்.

ரஜினி காந்த் - ஐஸ்வர்யாராய் நடிப்பில் 2010 ம் ஆண்டில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2 வது பாகத்தை எடுக்க தற்போது ஷங்கர் தீர்மானித்து இருக்கிறார்.

ஏறத்தாழ உறுதி செய்யப்பட்டாலும் கூட படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக ஒட்டுமொத்தத் திரையுலகமும் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறது.

எந்திரன் 2

எந்திரன் 2

2010 ம் ஆண்டு வெளிவந்து தென்னிந்தியத் திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த எந்திரன் படத்தின் 2 வது பாகத்தை எடுக்க இயக்குநர் ஷங்கர் ஆர்வம் கொண்டிருக்கிறார். தற்போது படத்தின் முன்னோட்ட மற்றும் பிற தொழில்நுட்ப விஷயங்களில் ஷங்கர் ஈடுபட்டு வருகிறார்.

ரஜினி

ரஜினி

பா.ரஞ்சித்தின் கபாலி படத்தின் படப்பிடிப்புக்கு நடுவே ஒரு சிறிய பிரேக் எடுத்துக் கொண்ட ரஜினி தற்போது எந்திரன் 2 விற்கான மேக்கப் விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். முழு உடல் பரிசோதனை மற்றும் மேக்கப் டெஸ்ட் போன்றவற்றை ரஜினியின் உடல்நிலை தாங்குமா? என்று மேக்கப் வல்லுநர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். இந்த பரிசோதனையானது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடந்து வருகிறது.இதற்காக ரஜினி மற்றும் ஷங்கர் இருவரும் அமேரிக்கா சென்றுள்ளனர்.

அறிவிப்பு + பிறந்தநாள்

அறிவிப்பு + பிறந்தநாள்

டிசம்பர் மாதம் 12 ம் தேதி ரஜினி தனது 6'5 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். அவரது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு விருந்து தரவேண்டி எந்திரன் 2 வின் அறிவிப்பை வெளியிட ஷங்கர் எண்ணியிருந்தார்.

மழையால் தாமதம்

மழையால் தாமதம்

இந்நிலையில் சென்னையின் கடுமையான மழை காரணமாக இந்த அறிவிப்பு தள்ளிப் போகலாம் என்று கூறுகின்றனர். அநேகமாக டிசம்பர் 18ம் தேதி படத்தின் தொடக்க விழாவும், அறிவிப்பும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தியாவின்

இந்தியாவின்

சுமார் 250 - 300 கோடிவரை உருவாகவிருக்கும் இப்படம் இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Rajini's Endhiran 2 launch date may be postponed due to Chennai's Heavy rain.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil