»   »  அரசியலுக்கு வர சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார் ரஜினி: நண்பர் ராஜ் பகதூர்

அரசியலுக்கு வர சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார் ரஜினி: நண்பர் ராஜ் பகதூர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ரஜினி அரசியலுக்கு வருவார், சரியான நேரத்திற்காக காத்திருக்கிறார் என அவரின் நண்பர் ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். 15ம் தேதி சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பேசினார்.

அரசியலுக்கு வருவேன் என்றும் கூறவில்லை, வர மாட்டேன் என்றும் அவர் கூறவில்லை.

ரசிகர்கள்

ரசிகர்கள்

ரஜினியின் பேச்சை கேட்ட ரசிகர்கள் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்ற நம்பிக்கை பெற்றுள்ளனர். மற்றவர்களோ அவரை சமூக வலைதளங்களில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராஜ் பகதூர்

ராஜ் பகதூர்

ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து பெங்களூரை சேர்ந்த அவரின் நண்பர் ராஜ் பகதூர் பேட்டி அளித்துள்ளார்.

ரஜினி

ரஜினி

ரஜினி கடந்த முறை பெங்களூருக்கு வந்தபோது அரசியல் பற்றி என்னுடன் 12 மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் தமிழக அரசியல் சூழலை உற்று கவனித்து வருகிறார் என்று ராஜ் பகதூர் தெரிவித்துள்ளார்.

அரசியல்

அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு தமிழக அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது என்று ரஜினி கூறினார். அவர் தமிழக மக்களின் நலனை மனதில் வைத்து சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்கிறார் ராஜ் பகதூர்.

English summary
Rajinikanth's close friend Raj Bahadur said that the superstar is waiting for the right time to take right decision for the welfare of TN people.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil