பீஸ்ட் பார்த்துட்டு ரஜினி கொடுத்த காமெடி கமெண்ட்...தலைவர் 169 சான்ஸ் இவருக்கு தானா?
சென்னை : நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை சமீபத்தில் ரஜினி பார்த்தார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் படத்தை பார்த்த பிறகு காமெடியான கமெண்ட் ஒன்றை ரஜினி கொடுத்துள்ள தகவலும், தலைவர் 169 பற்றி அவர் எடுத்திருக்கும் முடிவு பற்றியும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு பலரும் நெல்சன் திரைக்கதையில் சொதப்பி உள்ளார். விஜய் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை அவர் சரியாக பயன்படுத்தாமல் வீணடித்து விட்டார். விஜய்க்காக படம் ஓடி விடும், ஹிட் ஆகி விடும் என நினைத்து அசால்டாக நெல்சன் இந்த படத்தை எடுத்துள்ளார் என சினிமா உலகை சேர்ந்த பலரே கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.

பீஸ்ட்டுக்கு கொடுக்கப்பட்ட பில்ட்அப்
நெல்சன் திலீப்குமார் இயக்கிய முந்தைய இரண்டு படங்களான கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் கமர்ஷில் ஹிட் கொடுத்தன. அதிலும் டாக்டர் படம் கொரோனா காலத்தில் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் ரிலீசாகி 100 கோடி வசூல் பார்த்தது. இதனால் விஜய்யை வைத்து அவர் எடுக்க போகும் பீஸ்ட் படம் வேற லெவலில் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்தனர். படம் அப்படி தான் இருக்க போகிறது என அனைவரும் நம்பும் அளவிற்கு பில்டப்பும் கொடுக்கப்பட்டது.

தலைவர் 169 ஷுட்டிங்
இதனால் பீஸ்ட் ரிலீசாவதற்கு முன்பே ரஜினியின் தலைவர் 169 படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கொடுக்கப்பட்டது. இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க போவதாக அறிவிக்கப்பட்டது. ரஜினி விரைவில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க செல்ல உள்ளதாகவும், அவர் திரும்பி வந்த உடன் ஜுன் மாதத்திற்கு பிறகு தலைவர் 169 ஷுட்டிங் துவங்கப்படும் என கூறப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்களும் அதிக ஆர்வமாக காத்திருந்தனர்.

பீஸ்ட் படம் பார்த்த ரஜினி
பீஸ்ட் ரிலீசான பிறகு சன் டிவி அலுவலகத்தில் ரஜினிக்கு சிறப்பு காட்சி போட்டு காட்டப்பட்டுள்ளது. படத்தை பார்த்து விட்டு ரஜினி எதுவும் பேசவில்லையாம். இன்டர்வலின் போது ரஜினி, பாப்கார்ன் மற்றும் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். படம் முடிந்த பிறகும் 30 நிமிடங்கள் வரை ரஜினி வெளியே வரவேயில்லையாம். தீவிர யோசனையிலேயே இருந்தாராம்.

ரஜினி என்ன சொல்லிருக்கார் பாருங்க
பிறகு வெளியே வந்த ரஜினியிடம் உடன் இருந்த ஒருவர், பீஸ்ட் படம் எப்படி இருக்கிறது என கேட்டுள்ளார். அதற்கு ரஜினியோ செம கூலாக, ஐஸ்க்ரீம் நன்றாக இருந்தது என காமெடியாக சொல்லி விட்டு போனாராம். இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்காத அங்கிருந்தவர்கள் ஜர்க் ஆகி போயுள்ளனர். இரண்டு மணி நேரம் பார்த்த பீஸ்ட் படத்தை விட, இன்டர்வெலில் சாப்பிட்ட ஐஸ்க்ரீம் தான் ரஜினிக்கு பிடித்திருக்கிறதா என ஷாக்காக கேட்டுள்ளனர்.

இவர் லிஸ்ட்லையே இல்லையாம்
பீஸ்ட் படம் பார்த்த பிறகு தலைவர் 169 படத்தை இயக்கும் பொறுப்பை அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமியிடம் கொடுக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் உண்மை அது இல்லையாம். தேசிங்கு பெரியசாமி சொன்ன கதையில் வரும் ஸ்டன்ட் காட்சிகள் செய்வது ரஜினிக்கு மிகவும் கடினமானது என்பதால் அந்த யோசனையை எப்போதோ கை விட்டு விட்டாராம் ரஜினி. அட்லி, ஷாருக்கான் படத்தை முடித்து விட்டு விஜய்யுடன் மற்றொரு படம் பண்ண போவதாக கூறப்படுவதால் தலைவர் 169 படத்தை அட்லி இயக்குவதற்கான வாய்ப்பு மிக குறைவாம்.
Recommended Video

தலைவர் 169 டைரக்டர் இவரா?
தலைவர் 169 படத்தை இயக்கும் பொறுப்பை கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஒப்படைக்கலாமா என ரஜினி ஆலோசித்து வருகிறாராம். அதே சமயம் மற்றொரு தகவலாக, பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு ரஜினியின் ரியாக்ஷன் பற்றி தெரிந்ததும் ஏற்கனவே ரஜினியிடம் சொல்லி ஓகே வாங்கிய கதையில் பல திருத்தங்களை செய்து வருகிறாராம் நெல்சன். விரைவில் அது பற்றி ரஜினியிடமும் பேச போகிறாராம். இன்னும் ஒரு வாரத்தில் தலைவர் 169 டைரக்டர் யார் என்பதை அறிவிக்க ரஜினி முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











