»   »  கபாலியைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவை அதிர வைத்த காலா!

கபாலியைத் தொடர்ந்து சோஷியல் மீடியாவை அதிர வைத்த காலா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலியின் இன்டர்நேஷனல் பரபரப்பிற்கு பின், இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது பற்றி பல யூகங்களும் தகவல்களும் வந்துகொண்டிருந்தன.

முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கிறார், வடசென்னையை மையப்படுத்திய பாக்ஸர் ஒருவரின் கதை என்பது வரை யூகங்கள் ரெக்கை கட்டின. பின் திடீரென அந்த நடிகர் பா இரஞ்சித் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும் கூட பேசிக்கொண்டார்கள். அது உண்மையா என்பதையும் அதற்கான காரண காரியங்களைld தெரிந்துகொள்வதையும், உங்கள் சவுகர்யம் மற்றும் திறமைக்கு விட்டு விடுகிறேன்.


Rajini's Kaala shattered social media

இதற்கிடையில் திடீரென ரஜினியே, இரஞ்சித்தின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் என்ற ட்வfட்டரில் பகிர்ந்தார், தனுஷ். மீண்டும் இரஞ்சித் பெயரை வைத்து பரபரப்புகள் பற்றிக்கொண்டது. கூடுதலாக அந்த படத்தை தனுஷ், தானே தயாரிக்கிறேன் என்றும் சொல்லி இன்னும் பரபரப்பாக்கினார்.


கபாலிக்கு அடுத்து தான் இயக்கும் படத்திலும் ரஜினியே நடிக்கிறார் என்றதும் கதை, கதைக்களம் தேர்வு செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கினார், இரஞ்சித். மும்பை மற்றும் தாராவி தமிழ் மக்களோடு தொடர்புடைய கதையை இயக்க திட்டமிட்டார்.


அதற்காக மூன்று மாதங்கள் மும்பையில் தங்கி இருந்து, தாராவி மக்களோடு பழகினார், பேசினார். மும்பை தமிழர்கள் பற்றி நிறைய தகவல்களைச் சேகரித்தார். இந்நிலையில் மே.25ம் தேதி ரஜினி-இரஞ்சித் கூட்டணியின் இரண்டாவது பட தலைப்பும், முதல் போஸ்டரும் வெளியானது.


காலா. கருப்பு பின்னணியில் சிவப்பு எழுத்தில் காலா என்ற பெயருக்கு கீழே கரிகாலன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்த்து.


காலை 10 மணிக்கு தலைப்பு வெளியானதில் இருந்து விளக்கங்கள், விவாதங்கள், கருத்துகள் என சோஷியல் மீடியா தடதடக்க ஆரம்பித்தது.


காலா என்பது கரிகாலன் என்பதன் சுருக்கம் என்று இரஞ்சித் விளக்கம் சொன்னார். ஆனால், காலா என்றால் என்ன என்பது பற்றி பல கருத்துகள் இன்னமும் உலவிக்கொண்டிருக்கின்றன.


அதில் சில...


'காலா என்றால் எமன்...


காலா என்றால் இந்தியில் கருப்பு.


காலா என்றால் இந்தியில் கருப்பு என்று அர்த்தம். அதாவது மும்பையில் வாழும் தமிழர்கள், தென்னிந்தியர்களை கருப்பர்கள் என்று குறிப்பிடும் வகையில் காலா எனக் குறிப்பிடுவார்கள். மலையாளிகள் தமிழர்களைப் பாண்டி என்று குறிப்பிட்டு கேலி செய்வதைப் போல!'


'கரிகாலனின் இன்னொரு பெயர் திருமாவளவன். எனவே திருமாவளவனை குறிக்கவே இந்த தலைப்பு.'


'விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இன்னொரு பெயர், கரிகாலன். அவரைக் குறிக்கவே இந்த தலைப்பு.'


'காலா சஸ்தா என்பது மும்பை டான்களை குறிக்கும் சொல். அவர்கள் கருப்பு கண்ணாடி அணிந்திருப்பார்கள். அதன் குறியீடு தான் காலா.'


இப்படியாக தலைப்புக்கான அர்த்தங்கள் பரபரத்துக்கொண்டிருக்க, மாலையில் வெளியான முதல் போஸ்டர் அடுத்த அதிரடி.


360 டிகிரி கோணத்தில் தாராவி போன்ற ஒரு பகுதி காட்டப்பட்டிருக்க, ஒரு ஜீப்பில் கால்மேல் கால்போட்டு ரஜினி மாறுபட்ட தோற்றத்தில் அமர்ந்திருப்பார். அந்த ஜீப்பின் நம்பர் பிளேட்டில் MH 01 BR 1956 என்று இருக்கும்.


அதைப்பற்றி சோஷியல் மீடியாவில் வந்த சில சுவாரஸ்யங்கள்...


'MH மகாராஷ்டிரா. அம்பேத்கர் பிறந்த மாநிலம்


BR - அம்பேத்கரின் இனிஷியல்.


1956 - அம்பேத்கர் இறந்த வருடம்


BR - பா. இரஞ்சித்'


"நாயகன் வேலு நாயக்கரும் காலா கரிகாலனும் மும்பை வாழ் தமிழர்கள். நாயகன் படத்தில் கமல் ஹாசன் வேலு நாயக்கர் கேரக்ட்ரில் நடித்து இருப்பார்.காட்சிக்கு காட்சி வேலு நாயக்கர் என்றுதான் வசனம் வரும்.ஆனால் அதில் நமக்கு சாதி பெரிதாக தெரியாமல், வேலு நாயக்கரை தமிழன் என்றோம். ஆனால் கண்டிப்பாக காலா படத்தில் ரஜினி இந்த சாதி என்று வசனம் வராது. அதுவும் கரிகாலன் என்று அழகான தமிழ் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் காலாவை தமிழன் என்று இந்த சாதி சமூகம் ஏற்று கொள்ளாது. இங்குதான் உங்கள் டக்கு இருக்கு."


"காலா' கரிகாலன் மூன்று மொழிகளில் ... எங்க கதை , எங்க நெல்லைதமிழ் மக்களின் கதை. திருநெல்வேலி தமிழில் ரஜினி பேசுவதை காண ஆவலுடன் இருக்கிறேன்..."


- இப்படியாக பல விவாதங்கள் அனுமானஙகள் விளக்கங்கள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்த தலைப்பிற்கும் இந்த முதல் போஸ்டருக்கும் விமர்சனங்கள் தூள் பறக்கின்றன.


இதில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும். காலா... என்றால் காலாவதி என்று ஒரு கூட்டமும் வேறு வகையில் இப்போதிருந்தே காலா படத்திற்கு எதிர்மறையான கருத்துகளையும் கிண்டல்களையும் துவங்கி விட்டனர். நம்பர் பிளேட்டில் அம்பேத்கர் இறந்த வருடம். அதில் மேல் கால் வைத்திருப்பது அம்பேத்கரையே அவமதிப்பது போன்றது என்றது சிறுபிள்ளைத்தனமாகவும் சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.


மும்பையில் ஒரு டான் பற்றிய படம் இது என தகவல்கள் வர, அவரின் வளர்ப்பு மகன் ஒருவர் எச்சரிக்கை கடிதம் விடும் படலமும் நடந்தேறி இருக்கிறது. அதோடு தாராவியில் திருநெல்வேலி மக்களே அதிகம் என்பதால் காலா ரஜினி, பேசும் மொழி திருநெல்வேலி வட்டார வழக்காக இருக்கும் என்ற மகிழ்ச்சியில் திருநெல்வேலிக்காரர்கள்.


கபாலி தோல்விப்படம் என்று சிலர் இன்னமும் முனகிக்கொண்டிருக்க, கலைப்புலி தாணுவிற்கும் ஜாஸ் சினிமாவிற்கும் தான் தெரியும்... உண்மையான லாபம் எவ்வளவு என்பது. தாணு தயாரித்தார். ஆனால் வெளியீடும் உரிமை முழுவதையும் அவர் வைத்துக்கொள்ளவில்லை.


இப்போது தாணு இடத்தில் தனுஷ். தயாரிப்பாளர் தனுஷ்... காலா படத்தை வெளியிடுவதையும் அவரே செய்ய வாய்ப்பிருக்கிறது.


ஏன் எனில் கபாலிக்கு சற்றும் குறைவில்லாத, சொல்லப்போனால் அதைவிட அதிகமாக காலா.. இப்போதே பேசு பொருளாகி விட்டது. அதிலும் மும்பை, தாராவி, தமிழ் மக்கள், டான், என ஏகப்பட்ட விசயங்கள் காலா படத்தில் இருப்பதால் கபாலியை விட பலமடங்கு கூடுதலாக காலா கல்லா கட்டும் என்பது உறுதி.


பா. இரஞ்சித் தனது படங்களில் தொடர்ந்து தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான அரசியலை பேசுவதாலும் தொடர்ந்து பேசுவேன் என்பதாலும் இரஞ்சித் மீதான சாதிய வெறுப்பும் வன்மங்களும் இருக்கவே செய்கிறது. எப்படியோ இதுவரை ரஜினி படங்களை எத்தனயோ பெரிய சிறிய புதிய இயக்குநர்கள் இயக்கி இருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் கிடைக்காத பரபரப்பு கபாலிக்கும் காலாவுக்கும் தலைப்பை அறிவிக்கும் போதே இருக்கிறது என்பதை ரஜினி அறிந்திருக்கிறார். மகிழ்ந்திருக்கிறார்.


காத்திரு..


#மகிழ்ச்சி


- முருகன் மந்திரம்

English summary
The entire social media is speaking, discussing about Rajinikanth's Kaala Karikalan movie design, firstlook for the past 3 days.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil