»   »  தணிக்கையில் ரஜினியின் கபாலி 'யூ' சான்றிதழைக் கைப்பற்றுமா?

தணிக்கையில் ரஜினியின் கபாலி 'யூ' சான்றிதழைக் கைப்பற்றுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தணிக்கைக்கு செல்லும் 'கபாலி' திரைப்படம் கண்டிப்பாக யூ சான்றிதழைப் பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே உட்பட முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் படம் 'கபாலி'. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருக்கிறார்.


Rajini's Kabali Bag 'U' Certificate from Censor Board?

இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவுக்கு வந்தததைத் தொடர்ந்து நாளை இப்படத்தை சென்சாருக்கு அனுப்புகின்றனர்.


தணிக்கைக்குழுவிடம் இருந்து சான்றிதழ் பெற்றபின் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்று தாணு தெரிவித்திருக்கிறார். தணிக்கையில் கபாலி யூ சான்றிதழைப் பெறும் என படக்குழுவினரும் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.


மறுபுறம் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.முதலில் ஜூலை 15 ம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகின.


ஆனால் தற்போது ஜூலை 22 ம் தேதிக்கு இப்படத்தை தள்ளி வைத்திருப்பதாக கூறுகிறார்கள்.இது ரஜினி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.

English summary
Tomorrow Rajini's Kabali going to Censor. The Movie Bag U Certificate from Censor Board? Wait and See!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil