»   »  மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!

மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கபாலி திரைப்படம மலாய் மொழியில் டப் செய்யப்படுகிறது.

இதன் மூலம் மலாய் மொழியில் டப் செய்யப்படும் முதல் தமிழ்ப் படம் என்ற பெருமையை கபாலி பெறுகிறது.

ரஞ்சித் இயக்கத்தில், தாணு தயாரிக்கும் கபாலி படத்தில் ரஜினி மூன்று வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு படம் வெளியாகும் என்று தெரிகிறது.

வியாபாரம்

வியாபாரம்

இந்த நிலையில் படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஏற்கெனவே அமெரிக்க உரிமையை ரூ 8 கோடிக்கு தாணு விற்பனை செய்துள்ளார். பிறநாடுகளில் வெளியிடும் உரிமையை அய்ங்கரன் நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியாவில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் வெளியிடும் உரிமையைப் பெற கடும் போட்டி நிலவுகிறது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்தில் நடந்துள்ளது. மலேசியாவில் கபாலி ரஜினியைக் காண பல ஆயிரம் ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

30 லட்சம் மலாய் மக்கள்

30 லட்சம் மலாய் மக்கள்

மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலாய் மக்கள் உள்ளனர். இந்த மக்கள் கபாலியை தங்கள் கண்டு களிக்க வசதியாக கபாலியை மலாய் மொழியில் டப் செய்ய முடிவு செய்துள்ளனர்.

முதல் தமிழ்ப் படம்

முதல் தமிழ்ப் படம்

ரஜினியின் முத்து படம்தான் முதல் முறையாக வெளிநாடுகளில் அதுவும் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்ட முதல் இந்தியப் படமாகும். அதன் பிறகு இப்போது அவரது கபாலி படம் மலாய் மொழியில் முதல் முறையாக டப் செய்யப்படுகிறது. இதற்கு முன் வேறு எந்த இந்திய, தமிழ்ப் படமும் மலாயில் டப் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth's Kabali is the first Tamil movie to be dubbed in Malay language.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil