»   »  'ரசிக கண்ணனுங்களே.. கண்ட்ரோல் ப்ளீஸ்'! கபாலி டீமின் வேண்டுகோள் இது!!

'ரசிக கண்ணனுங்களே.. கண்ட்ரோல் ப்ளீஸ்'! கபாலி டீமின் வேண்டுகோள் இது!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் முதல் பார்வை படங்கள் வெளியான நாளிலிருந்து அந்தப் படங்களும் படம் தொடர்பான செய்திகளும்தான் இணையம் முழுவதும்.

அதுவும் ரஜினி மலேசியா போனதும் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட காட்சிகள், ரசிகர்களுடன் படம் எடுத்துக் கொண்டது போன்ற ஸ்டில்கள் ஆயிரக் கணக்கில் வெளியாகி வருகின்றன.


இவை ரசிகர்களை ஒருபக்கம் பரவசப்படுத்தினாலும், இந்த அளவு படங்கள் வெளியாவது படத்தை பாதிக்குமே என்ற கவலை படக்குழுவினருக்கு வந்துவிட்டது.


ரகசியம்

ரகசியம்

‘கபாலி' படத்தின் கதை, கதாபாத்திரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. கதை பற்றிய விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்று படக்குழுவினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


பிரமாண்ட செட்கள்

பிரமாண்ட செட்கள்

மலேசியாவில் படப்பிடிப்புக்காக பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரஜினிகாந்த் தங்கும் வீடு, தொழிலாளர்கள் பணியாற்றும் தொழிற்சாலைகள், வில்லன் கூட்டத்தினரின் ரகசிய மாளிகைகள் என விதவிதமான அரங்குகளை அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.


அடையாள அட்டை

அடையாள அட்டை

இந்த அரங்குக்குள் வருபவர்களுக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன. ரசிகர்கள், வெளியாட்கள் உள்ளே நுழையாமல் இருக்க வாசலில் பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர்.


ஆனால் பாதுகாப்பையும் மீறி ‘கபாலி' படக்காட்சிகள் இணையதளங்களில் பரவி வருகின்றன. குறிப்பாக ரஜினிகாந்த், விதவிதமான தோற்றங்களில் வரும் படங் களை செல்போனில் பதிவு செய்து ஆர்வக் கோளாறில் வெளியிட்டுவிடுகிறார்கள்.படக் காட்சிகள்

படக் காட்சிகள்

வில்லன்களிடம் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசும் காட்சிகள், ஓட்டலில் சாப்பிடுவது, காரில் வந்து இறங்குவது, மலேசிய போலீசார் மத்தியில் கைதியாக நிற்கும் காட்சி போன்றவை இணைய தளங்களில் பரவி உள்ளன. இதன் மூலம் ரகசியமாக இருந்த ‘கபாலி' ரஜினிகாந்தின் முழு தோற்றமும் ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டது. போதாக்குறைக்கு பிரபல வார இதழ்கள் வேறு தங்கள் பங்குக்கு முக்கிய ஸ்டில்களை வெளியிட்டு வருகின்றன.


நோ செல்போன்

நோ செல்போன்

துணை நடிகர், நடிகைகள் ரஜினியை செல்போன்களில் படம் எடுத்து இணைய தளங்களில் பரப்புவதாக கூறப்படுகிறது. இதை தடுக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் செல்போன்களை படப்பிடிப்பு அரங்குக்குள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.


வேண்டுகோள்

வேண்டுகோள்

அதே போல, ரசிகர்கள் கபாலி கெட்டப்பில் ரஜினி வரும்போது படமெடுத்து இணையதளங்களில் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


English summary
The Kabali crew has requested fans and crew members not to share Rajinikanth's Kabali getup stills online.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil