»   »  கபாலி கதை இப்படி இருக்குமோ?

கபாலி கதை இப்படி இருக்குமோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி - ரஞ்சித் இணையும் புதிய படமான கபாலி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

அட்டக்கத்தி தினேஷ், மெட்ராஸ் கலையரசன், ராதிகா ஆப்தே, தன்ஷிகா ஆகியோர் ரஜினியுடன் இணைந்து கபாலியில் நடிக்க இருக்கின்றனர்.


இந்நிலையில் படத்தின் கதை இப்படி இருக்குமோ என்று ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது, மேலும் இந்தக் கதை உண்மையாக இருக்கலாம் என்றும் தகவல்கள் கசிந்து இருக்கின்றன.


இந்தக் கதையை படித்தால் இதுதான் உண்மைக் கதையோ என்று நம்பும் அளவிற்கு இருக்கிறது, அப்படி என்ன கதை என்று கேட்கிறீர்களா? கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.


கபாலி

கபாலி

கதைப்படி ரஜினி அனாதையாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருக்க, அவரைக் கண்டெடுக்கும் பெரியவர் ஒருவர் அவருக்கு கபாலீஸ்வரன் என்று பெயர் வைத்து வளர்க்கிறார்.


சிவபக்தர்

சிவபக்தர்

வளரும் ரஜினி பெரிய ஆளாக வளர்ந்த பின்பு தாதாயிசத்தை கையில் எடுக்கிறார், ஆனால் சிவனைக் கேட்காமல்(கபாலீஸ்வரர்) எந்த ஒரு காரியத்தையும் ரஜினி தொடங்க மாட்டார்.


ஏழை மக்களைக் காப்பாற்ற

ஏழை மக்களைக் காப்பாற்ற

அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்காக கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் போன்றவற்றை கையில் எடுத்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.


குடும்பம் முக்கியம் பாஸ்

குடும்பம் முக்கியம் பாஸ்

ஒரு கட்டத்தில் மனைவி, மகள் என்று குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.


மலேசியா பயணம்

மலேசியா பயணம்

ரஜினி தனது வாழ்க்கையில் நிறைய இளைஞர்களை அயல்நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார், அவர்களில் மலேசியாவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு பிரச்சினைகள் ஆரம்பமாகிறது. இதனால் மறைமுகமாக மாறுவேடத்தில் மலேசியா செல்கிறார் ரஜினி.


பிரச்சினைகளை சமாளித்தாரா

பிரச்சினைகளை சமாளித்தாரா

மலேசியா இளைஞர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்து அவர்களின் வாழ்வில் ரஜினி ஒளியேற்றினாரா, என்பதே மீதிக் கதையாம்.


இது உண்மையான கதையா? என்பது தெரியவில்லை..ஆனால் மலேசியாவில் ஷூட்டிங், மகளாக தன்ஷிகா நடிப்பது, ரஜினி டானாக தோன்றுவது எல்லாவற்றையும் முடிச்சுப் போட்டு பார்த்தால் கதை இப்படித்தான் வருகிறது.


ரஞ்சித் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை, பார்க்கலாம்...English summary
Rajini's Kabali Movie Story Line.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil