»   »  மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரகாஷ் ராஜ்!

மீண்டும் ரஜினியுடன் இணையும் பிரகாஷ் ராஜ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ லவ் யூ செல்லம் என்ற வார்த்தையை தமிழர்களின் வாழ்க்கையில் இரண்டறக் கலக்கச் செய்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

கில்லி படத்தின் மாபெரும் வெற்றிக்கு முக்கியக் காரணமான பிரகாஷ் ராஜை தற்போது தமிழில் அதிக படங்களில் பார்க்க முடியவில்லை.

தமிழ் சினிமாவில் சிறிது காலம் காணாமல் போயிருந்த பிரகாஷ் மீண்டும் கமலின் தூங்கா வனம் படத்தின் மூலம் தமிழில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார், அதே போன்று ரஜினியின் படத்திலும் அவர் நடிக்கலாம் என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தில் அட்டகத்தி தினேஷ் மற்றும் மெட்ராஸ் புகழ் கலையரசன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க இருக்கிறார்கள். தற்போது பிரகாஷ் ராஜும் படத்தில் நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

கேங்க்ஸ்டர் கதையை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்புடன் மலேசியாவில் துவங்கப் படவுள்ளது.

ரஜினியுடன் பிரகாஷ் ராஜ் இணைவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே படையப்பா படத்தில் சின்ன வேடத்தில் வந்து போனவர்தான் பிரகாஷ் ராஜ். இந்தப் படத்திலாவது அவருக்குப் பெரிய ரோல் கொடுப்பார்கள் என நம்பலாம்

English summary
Director Pa.Ranjith's Next Movie Now Prakash Raj has been signed. He will be playing an important role in this movie.
Please Wait while comments are loading...