»   »  ரஜினியையும் தொற்றிக் கொண்ட ‘மகிழ்ச்சி’!

ரஜினியையும் தொற்றிக் கொண்ட ‘மகிழ்ச்சி’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் மூலம் உலகம் முழுவதும் பரவிய மகிழ்ச்சி என்ற வார்த்தை அப்படத்தில் நடித்த ரஜினியையும் விட்டு வைக்கவில்லை. ரசிகர்களுக்கு அவர் எழுதியுள்ள நன்றிக் கடிதத்தின் இறுதியில் மகிழ்ச்சி என எழுதி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் ரஜினி.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.


இப்படத்தில் ரஜினி பேசும் முதல் வசனமே மகிழ்ச்சி என்பது தான்.


மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

ஏற்கனவே அதிகம் பேரால் பார்க்கப்பட்டு சாதனை புரிந்த கபாலி பட டீசரிலும் ரஜினி மகிழ்ச்சி எனச் சொல்வது இடம் பெற்றிருந்தது. எனவே, அப்போதே இந்த வார்த்தை உலகப் புகழ் பெற்றது.
பிரபலமானது...

பிரபலமானது...

பொதுவாக சந்தோஷத்தை வெளிப்படுத்த கூறும் வார்த்தை தான் மகிழ்ச்சி என்றாலும், சிலரின் வாயால் அது வெளிப்படும் போது, அதன் மவுசே தனி தான். அப்படித் தான் மகிழ்ச்சியும் தற்போது பிரபலமாகியுள்ளது.


தமிழே தெரியாதவர்களிடமும்...

தமிழே தெரியாதவர்களிடமும்...

தமிழே தெரியாதவர்களிடமும் கூட மகிழ்ச்சி என்ற அந்த அழகான சொல் பிரபலமானது ரஜினி மாஜிக்கின் இன்னும் ஒரு அம்சமாகும்.
ரஞ்சித் பழக்கம்...

ரஞ்சித் பழக்கம்...

இந்த மகிழ்ச்சி என்ற வார்த்தை வழக்கமாக இயக்குநர் ரஞ்சித் உபயோகிப்பது தானாம். எந்தவொரு பேச்சின் முடிவிலும், படப்பிடிப்பிலும் அவர் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவாராம். அவரது டிவிட்டர் பக்கப் பதிவுகளிலும் இந்த வார்த்தை தவறாமல் பார்க்கலாம்.


மெட்ராஸ் குழு...

மெட்ராஸ் குழு...

ஏற்கனவே, மெட்ராஸ் படத்தின் போதே படக்குழுவினருக்கு இந்த வார்த்தை பரிச்சயம் தானாம். ரஞ்சித்திடம் இருந்து மற்றவர்களுக்கும் இந்த வார்த்தை தொத்திக் கொண்டதாம்.


சௌந்தர்யா சொன்னது...

சௌந்தர்யா சொன்னது...

அப்படித்தான் ஒருமுறை ரஜினியின் மகளான சௌந்தர்யாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ரஞ்சித் மகிழ்ச்சி என்ற வார்த்தை பயன்படுத்தியுள்ளார். இதைக் கேட்ட சௌந்தர்யா, இந்த வார்த்தை நன்றாக இருக்கிறது. படத்திலும் பயன்படுத்துங்கள் எனக் கூறினாராம்.


பஞ்ச் ஆனது...

பஞ்ச் ஆனது...

அப்படித்தான் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்களில் ஒன்றாகியுள்ளது மகிழ்ச்சி. கபாலி படத்தில் அடிக்கடி ரஜினி உச்சரிக்கும் வார்த்தையும் இது தான்.


நிஜத்திலும் ‘மகிழ்ச்சி’...

நிஜத்திலும் ‘மகிழ்ச்சி’...

இந்நிலையில் தற்போது கபாலி படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றிக் கடிதம் எழுதியுள்ள ரஜினி, அதன் இறுதியில் மகிழ்ச்சி என எழுதியுள்ளார். மேலே ஒரு இடத்தில் சந்தோஷம் என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அவர், இறுதியில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டு நிஜத்திலும் கபாலியை நினைவுப் படுத்தியுள்ளார்.


English summary
Superstar Rajini has thanked fans for the supporting for the movie Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil