»   »  விஜய், அதர்வாவுக்கு ரஜினி கொடுத்த அங்கீகாரம்!

விஜய், அதர்வாவுக்கு ரஜினி கொடுத்த அங்கீகாரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமா என்றல்ல.. இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமை ரஜினிகாந்த். அப்படி ஒரு ஆளுமை, வளர்ந்து வரும் கலைஞர்களை வியந்து வாழ்த்துவது அரிதான விஷயம்.

ஆனால் இதனை பலமுறை செய்தவர், செய்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த்.

Rajini's recognition to Vijay and Atharva

சமீபத்தில் கணிதன் படத்தைப் பார்த்த ரஜினி, அதில் நடித்த அதர்வாவைப் பாராட்டியுள்ளோர். அத்துடன், அவரைப் பார்த்தபோது தனக்கு விஜய்யைப் பார்த்தது போலிருந்தது என இரண்டு கலைஞர்களையும் கவுரவப்படுத்தியுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள கணிதன் படத்தை, வெளிவருவதற்கு முன்பே, ரஜினிக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார்.

படத்தை இடைவெளி இல்லாமல் பார்த்த ரஜினி, அரை மணி நேரம் படத்தை பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். மேலும், அறிமுக இயக்குனர் ஒருவருக்கு படவாய்ப்பு கொடுத்ததற்கு தாணுவுக்கு பாராட்டு தெரிவித்தார். அதர்வாவை பார்க்கும்போது விஜய்யை பார்த்ததுபோல் இருப்பதாகவும், இப்படத்தை இயக்கிய டி.எம்.சந்தோஷை தான் பார்க்க விரும்புவதாகவும் அவரிடம் கூறியுள்ளார்.

ரஜினியிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்தது படக்குழுவினர் அனைவருக்கும் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. ரஜினி சார் என்னுடைய பெயரை உச்சரித்ததே நான் மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறேன் என்று இயக்குனர் டி.எம்.சந்தோஷ் ஆனந்தத்தில் மிதக்கிறார்.

English summary
Rajinikanth has praised Kanithan hero Atharva after watched the movie at a special show.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil