Don't Miss!
- News
"3 பஸ் அளவுக்கு பெருசு.." சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தாமல் இருப்பது ஏன் தெரியுமா! பரபர
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரஜினியின் 2.0 படம் தமிழ்புத்தாண்டுக்கு ரிலீஸ் - கோடையில் கொண்டாட்டம் #2Point0
சென்னை: ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள திரைப்படம் 2.0. எமி ஜாக்ஷன் கதாநாயகியாகவும், அக்ஷய் குமார் வில்லனாகவும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
கதாநாயகன் ரஜினிகாந்த்தின் கெட்டப்பை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமான முறையில் துபாயில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

2.0 மிரட்டல் தொழில் நுட்பம்
பிரம்மாண்ட படைப்புகளுக்கு பெயர் போன ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் பார்ட் 2வாக இந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது. மிரட்டும் கிராபிக்ஸ், 3டி தொழில்நுட்பம் என்று 2.0 பிரம்மாண்டங்களுக்கு குறைவில்லாமல் காட்சியாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் சில வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

ரூ.400 கோடி செலவில் தயாரிப்பு
சுமார் 400 கோடியில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் 2.0 திரைப்படம் 2018 ஜனவரி மாதத்தில் குடியரசு தினத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
|
ஜனவரி 26ல் அக்ஷய் குமார் படம்
அதே நாளில் பால்கி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள பேட்மேன் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி, அக்ஷய் குமார் நடித்துள்ள 2.0 திரைப்படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
|
தமிழ் புத்தாண்டு ரிலீஸ்
ரஜினி, அக்ஷய் குமார் நடித்துள்ள 2.0 திரைப்படம் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீதர் பிள்ளை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.