»   »  வெள்ள நிவாரண நிதிக்காக... அமெரிக்காவில் 10 நகரங்களில் ரஜினியின் சிவாஜி சிறப்புக் காட்சி!!

வெள்ள நிவாரண நிதிக்காக... அமெரிக்காவில் 10 நகரங்களில் ரஜினியின் சிவாஜி சிறப்புக் காட்சி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சியாட்டல்(யு.எஸ்): சென்னை வெள்ள நிவாராண நிதி திரட்டுவதற்காக சியாட்டல் தமிழ்ச் சங்கம் சார்பில் இன்று(டிசம்பர் 12) சனிக்கிழமை மாலை 5 மணிக்கு ரென்டன் ராக்ஸி தியேட்டரில் , ரஜினியின் சிவாஜி - தி பாஸ் படம் திரையிடப்படுகிறது.

Rajini's Sivaji Special show in US for flood relief

அமெரிக்கா முழுவதும் உள்ள தமிழ் அமைப்புகள் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக பல்வேறு வகையில் நிதி திரட்டி வருகிறார்கள். பணம் முறையாக செலவிடப்படவேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தமிழ் அமைப்புகள், தங்கள் சார்பில் நேரிடையாகவே சென்னை , கடலூர் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள்.


தவிர் அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்கள் குழுவாக ஒருங்கிணைந்து தமிழகத்தில் உள்ள நண்பர்கள் மூலமாக உதவி செய்து வருகிறார்கள்.


Rajini's Sivaji Special show in US for flood relief

தமிழ் நாடு அறக்கட்டளை மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை சார்பாகவும் நிவாரண உதவிகள் நடைபெற்று வருகின்றன.


இந் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளான இன்று, சியாட்டல் தமிழ்ச் சங்கத்தினர் அவரது சிவாஜி திரைப்படத்தின் மூலமாகவும் நிதி திரட்டுகிறார்கள்.


400க்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட ராக்ஸி அரங்கத்தில் சிவாஜி படத்திற்கு வசூலாகும் மொத்த தொகையும் சென்னை நிவாரண நிதியாக வழங்கப்படுகிறது.
மேலும் சியாட்டல் தமிழ்ச் சங்கமும் சியாட்டல் அஞ்சப்பர் உணவகமும் இணைந்து டிசம்பர் 16ம் தேதி புதன்கிழமை உணவுத் திருவிழா நடத்துகிறார்கள். அன்று மதியம் மற்றும் இரவு இரண்டு நேரத்திலும் வாடிக்கையாளார்கள் செலுத்தும் பில் தொகை சென்னை நிவாரண நிதிக்கு அஞ்சப்பர் உணவகம் வழங்குகிறது.


Rajini's Sivaji Special show in US for flood relief

சியாட்டல் தமிழ் சங்கத்தின் சார்பில் சென்னையில் பூமிகா ட்ரஸ்ட் மற்றும் உதவும் கரங்கள் அமைப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்கிறார்கள். கடலூரில் விபா ட்ரஸ்ட் நிவாரண உதவிகளை செய்கிறது.


சியாட்டல், தவிர மற்றா அமெரிக்க நகரங்களிலும் ப்ரைம் மீடியா இன்று சிவாஜி திரைப்படத்தை மீண்டும் சென்னை - கடலூர் வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்காக திரையிடுகிறார்கள்.


சியாட்டல் ராக்ஸி சினிமாஸ்,
டல்லாஸ் ஃபன் ஏசியா ரிச்சர்ட்சன்,
சான் ஓசே டவுண்3,
வர்ஜினியா டிசி சினிமாஸ்,
ஃபீனிக்ஸ் டெம்பிள் சினிமாஸ்,
சிகாகோ மூவி மேக்ஸ், வர்ஜீனியா டிசி சினிமாஸ்,
அட்லாண்டா ஆகாஷ் சினிமாஸ்,
பாஸ்டன் ஆப்பிள் சினிமாஸ்,
மினியாபோலிஸ் ஆப்பிள் வேலி கார்மைக்,
வட கரோலைனா கேரி கார்மைக் ஆகிய திரையரங்குகளில் சிவாஜி - தி பாஸ் படம் இன்று திரையிடப்படுகிறது.


சிவாஜி படத்தை திரையிட ஏவிஎம் நிறுவனம் இலவசமாக அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


முதலமைச்சர் நிதிக்கு பத்து லட்சமும், தனியாக நிவாரணப்பொருட்களும் வழங்கி சென்னை, கடலூர், தூத்துக்குடி வெள்ளத்திற்காக ரூ 6 கோடிக்கும் மேலாக ரஜினி நிவாரண உதவி செய்த நிலையில், அவர் நடித்து 2007 ம் ஆண்டு வெளியான சிவாஜி - த பாஸ் படமும் அமெரிக்கா முழுவதும் நிதி திரட்டுகிறது என்பது உலகத்தில் எங்குமே நடைபெறாத அதியசமான ஒன்றாகும்.


இது சமூகவலைத்தளங்களில் ரஜினியை நோக்கி கேள்வி எழுப்புவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான செய்தியும் ஆகும்.


-சியாட்டலிலிருந்து இர தினகர்

English summary
The Tamil activist in North America are arranging ticket show of Rajinikanth's Sivaji - The Boss to raise fund for Chennai Flood victims.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil