»   »  காலா... ரஜினி - ரஞ்சித்தின் புதுப் படத் தலைப்பு வெளியானது!

காலா... ரஜினி - ரஞ்சித்தின் புதுப் படத் தலைப்பு வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா. ரஞ்சித், ரஜினி மீண்டும் இணையும் படத்திற்கு காலா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கபாலி படத்தை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பா. ரஞ்சித் மீண்டும் சேர்ந்துள்ளனர். மும்பை பின்னணியில் இந்த கதை படமாக்கப்படுகிறது. இது ஹாஜி மஸ்தானின் கதை என்று முதலில் கூறப்பட்டது.


Rajini's upcmoing movie is titled Kaala

இதனால் ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் விடுத்தார். இதையடுத்து படம் ஹாஜி மஸ்தானை பற்றியது இல்லை என்று தயாரிப்பாளர் தனுஷ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.


இந்நிலையில் படத்தின் பெயரை இன்று காலை 10 மணிக்கு அறிவிப்போம் என தனுஷ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதே போன்று படத்தின் பெயரை அறிவித்துள்ளார்.


படத்தின் பெயர் காலா என்று தனுஷ் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.English summary
Producer Dhanush has announced that Rajinikanth's upcoming movie to be directed by Ranjith is titled Kaala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil