»   »  "2.0" வில் நடிக்க வேண்டாம் என்று ரஜினி என்னிடம் சொன்னதால் நடிக்கவில்லை- அமிதாப்

"2.0" வில் நடிக்க வேண்டாம் என்று ரஜினி என்னிடம் சொன்னதால் நடிக்கவில்லை- அமிதாப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்திரன் 2.0 படத்தில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டதால் தான் அப்படத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்திருக்கிறார்.

அமிதாப் நடித்திருக்கும் வசிர் படத்தின் அறிமுக விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக காரில் சென்ற அமிதாப் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

இதனால் நடந்தே விழா நடக்கும் அரங்கத்திற்கு அமிதாப் சென்றார். விழா அரங்கில் இருந்த நிருபர்கள் அமிதாப்பிடம் பேட்டி எடுத்தனர்.

Rajini Said Don't Act in Enthiran 2 - Amitabh Bachchan

அந்த பேட்டியில் அமிதாப் "எந்திரன் 2.0 படத்தில் வில்லனாக நடிப்பதற்கு முதலில் இயக்குநர் ஷங்கர் என்னைத் தான் அணுகினார். அவர் கேட்டதும் நான் நடிகர் ரஜினியைத் தொடர்பு கொண்டு பேசினேன்.

ஆனால் அவர் உங்களை ஒரு வில்லனாக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே நீங்கள் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இதனால் தான் நான் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை" என்று அமிதாப் பச்சன் தான் எந்திரன் 2.0 வில் நடிக்காமல் போன காரணத்தை மனந்திறந்து கூறியிருக்கிறார்.

தற்போது அந்த வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    "Rajini Said Don't Play as a Villain in Enthiran 2" Bollywood Actor Amitabh Bachchan says in Recent Interview.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil