»   »  ரஜினி சும்மா சொன்னார், சூர்யா மாத்தி யோசித்து செய்தே விட்டார்

ரஜினி சும்மா சொன்னார், சூர்யா மாத்தி யோசித்து செய்தே விட்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தானா சேர்ந்த கூட்டத்தின் ப்ரோமோஷனல் டூர் அடிக்கும் சூர்யா.

சென்னை: ரஜினி ஒரு விஷயத்தை ரசிகர்களிடம் கூறியும் கேட்கவில்லை. இந்நிலையில் சூர்யா மாத்தியோசித்து ஒரு காரியம் செய்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து சந்தித்து பேசினார். அப்போது ரசிகர்கள் ரஜினியின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

வயது வித்தியாசமின்றி அவரின் காலில் விழுந்தார்கள்.

வேண்டுகோள்

வேண்டுகோள்

ரசிகர்கள் தன் காலில் விழுவதை பார்த்த ரஜினி தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். பெற்றோர்கள், பெரியவர்களின் கால்களில் மட்டுமே விழ வேண்டும் என்றார்.

கேட்கவில்லை

கேட்கவில்லை

ரஜினி அவ்வளவு சொல்லியும் ரசிகர்கள் கேட்கவில்லை. நீங்கள் தான் தலைவரே பெரியவர் என்று கூறி அவரின் காலில் தொடர்ந்து விழுந்து வணங்கி ஆசி பெற்றனர்.

டிஎஸ்கே

டிஎஸ்கே

தானா சேர்ந்த கூட்டம் நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நின்ற சூர்யாவின் காலில் ரசிகர்கள் விழுந்தார்கள். இதை பார்த்த சூர்யா சும்மா இல்லை. காலில் விழாதீர்கள் என்று சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்பது அவருக்கு தெரியும்.

அதிர்ச்சி

தனது காலில் விழுந்த ரசிகர்களின் காலில் பதிலுக்கு விழுந்தார் சூர்யா. இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இனி யாரும் சூர்யா காலில் விழமாட்டார்கள்.

English summary
Fans touched the feet of Suriya during TSK function. On seeing this he in turn touched the feet of the fans who got shocked by his behaviour. TSK is getting released tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X