»   »  ரஜினி - ரஞ்சித் புதுப்படம்: சர்க்கார் மாதிரி அதிரடி கதை... ஜோடி, டூயட் கிடையாது!

ரஜினி - ரஞ்சித் புதுப்படம்: சர்க்கார் மாதிரி அதிரடி கதை... ஜோடி, டூயட் கிடையாது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் முன்னரே, பல்வேறு தகவல்கள் கிட்டத்தட்ட உறுதியான தொனியில் வெளியாக ஆரம்பித்துள்ளன.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் சில நாட்களுக்கு தள்ளிப்போட்டுள்ள ரஜினியும் தாணுவும், பட வேலைகளில் பரபரப்பாக இறங்கிவிட்டனர்.

இளையராஜா?

இளையராஜா?

படத்துக்கு இசை ரஞ்சித்தின் முந்தைய இரு படங்களுக்கும் இசையமைத்த சந்தோஷ் நாராயணன் என்று சிலர் தொடர்ந்து கூறிவரும் நிலையில், இளையராஜா இசையமைக்கக் கூடும் என்று சிலர் உறுதியாகக் கூறுகின்றனர்.

தாணுவுக்கும் இளையராஜாவுக்கும் உள்ள நெருக்கத்தை வைத்து இதைக் கூறுவதாகவும் சிலர் சொல்கின்றனர்.

இரட்டை வேடங்கள்

இரட்டை வேடங்கள்

இந்தப் படத்தில் ரஜினி ஒரு டான் வேடத்தில் நடிப்பதாகவும், இன்னொரு வேடமும் அவருக்கு உள்ளதாகவும், ஆனால் அதை சஸ்பென்ஸாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

டூயட் கிடையாது

டூயட் கிடையாது

ஆனால் படத்தில் அவர் நாயகியுடன் டூயட் பாடுவது போன்ற காட்சிகளே இல்லையாம். அதே போல இளவயது நாயகி ஜோடி என்பதும் கிடையாதாம். சர்க்கார் படத்தில் அமிதாப் வருவது போன்ற ஒரு அழுத்தமான தாதா வேடமாம்.

தனி அலுவலகம்

தனி அலுவலகம்

தனி அலுவலகம் போட்டு, திரைக்கதை மற்றும் காட்சிகளை மெருகேற்றிக் கொண்டிருக்கிறாராம் ரஞ்சித். இந்த அலுவலகத்தின் மாத வாடகை மட்டும் ரூ 3.5 லட்சம் என்கிறார்கள்.

English summary
According to Kollywood reports, Rajini - Ranjith's new movie pre production works have been started and as per the story no pair or duet for Rajini.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil