»   »  ரஜினி நடிக்கும் 2.O... இந்தாங்க புதிய ஸ்டில்!

ரஜினி நடிக்கும் 2.O... இந்தாங்க புதிய ஸ்டில்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் எந்திரன் இரண்டாம் பாகமான 2.ஓ படத்தின் புதிய ஸ்டில் வெளியாகியுள்ளதில் ரசிகர்கள் ஏகத்துக்கும் குஷியாகிவிட்டனர்.

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


Rajini second still of 2.O released

ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.


இந்தப் படத்தின் டிசைன் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. இயக்குநர் ஷங்கர் முதலில் ஒரு படப்பிடிப்பு தள ஸ்டில்லை வெளியிட்டார். அதில் ரஜினியும் ஷங்கரும் இடம்பெற்றிருந்தனர்.


இந்த நிலையில் இந்தப் படத்தின் இன்னொரு புகைப்படத்தை இயக்குநர் ஷங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நேற்று ரஜினி படப்பிடிப்பில் கலந்து கொண்ட ஸ்டில் அது.


இதனை சமூக வலைத் தளங்களில் வைரலாகப் பரப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

English summary
The second shooting spot photo of Rajinikanth in 2.O has been released by director Shankar today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil