»   »  எந்திரன் 2... அமெரிக்கா செல்லும் ரஜினி, ஷங்கர்!

எந்திரன் 2... அமெரிக்கா செல்லும் ரஜினி, ஷங்கர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எந்திரன் 2 படத்துக்காக நடிகர் ரஜினிகாந்தும் இயக்குநர் ஷங்கரும் இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்கிறார்கள்.

இந்தப் படம் குறித்து லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் கலந்து கொள்கிறார்.

Rajini, Shankar to fly US

இப்போது கபாலி பட ஷூட்டிங்கில் பங்கேற்க மலேசியாவில் உள்ள ரஜினிகாந்த், சில தினங்கள் விடுமுறையில் அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து எந்திரன் 2 படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

அடுத்து படத்தின் பிரதான வில்லனாக நடிக்கும் அர்னால்டையும் சந்திக்கிறார். ஏற்கெனவே ஐ படத்தின் இசை வெளியீட்டின்போது ரஜினியும் அர்னால்டும் சந்தித்துப் பேசியது நினைவிருக்கலாம். இந்தச் சந்திப்பு முடிந்ததும் மீண்டும் மலேசியா திரும்பும் ரஜினி, கபாலி படப்பிடிப்பில் தொடர்ந்து பங்கேற்கிறார்.

ரூ 300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியாவின் பெரிய பட்ஜெட் படமான எந்திரன் -ஐ லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. எமி ஜாக்ஸன் உள்பட 3 நாயகிகள் நடிக்கின்றனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

English summary
As a part of pre-production of Endhiran 2, Rajinikanth and director Shankar will be leaving for California in US by the end of this month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil