»   »  ரஜினி சார் என் நெற்றியில் முத்தமிட்டு ஆசீர்வதித்தார்!- ரஞ்சித் மகிழ்ச்சி

ரஜினி சார் என் நெற்றியில் முத்தமிட்டு ஆசீர்வதித்தார்!- ரஞ்சித் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினியை நேற்று நேரில் சந்தித்தபோது, என்னை நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தினார் என்றார் கபாலி இயக்குநர் ரஞ்சித்.

கபாலி படம் வெளியாகி உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வசூலுடன் ஓடிக் கொண்டுள்ளது. இதுவரை ரூ 400 கோடி வரை இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் நேற்று லீ மெரிடியன் ஹோட்டலில் விழா கொண்டாடப்பட்டது.


ரஞ்சித்திடம் ஒரு சின்ன உரையாடல்

ரஞ்சித்திடம் ஒரு சின்ன உரையாடல்

விழாவில் பங்கேற்க வந்திருந்த இயக்குநர் ரஞ்சித் நம்மிடம் சிறிது நேரம் பேசினார். அப்போது அவரிடம், கபாலி ரிலீசுக்குப் பிறகு ரஜினியைச் சந்தித்தீர்களா? என்று கேட்டோம்.


தயக்கத்துடன் ரஜினி வீட்டுக்கு விசிட்

தயக்கத்துடன் ரஜினி வீட்டுக்கு விசிட்

அதற்கு பதிலளித்த அவர், "இன்று (வியாழன்) காலைதான் சாரைப் பார்க்க வீட்டுக்குப் போயிருந்தேன். கலவையான விமர்சனங்களால் சற்றே தயக்கத்துடன்தான் சென்றேன்.


முத்தமிட்டு வாழ்த்தினார்

முத்தமிட்டு வாழ்த்தினார்

ஆனால் என்னைப் பார்த்ததும் ஆர்வத்துடன் வரவேற்றார் ரஜினி சார். என்னைக் கட்டிப் பிடித்து நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துக் கூறினார். எனக்கு சிலிர்ப்பாக இருந்தது.


 அப்படித்தான் சொல்வார்கள்

அப்படித்தான் சொல்வார்கள்

படத்தின் விமர்சனங்கள் குறித்து கவலை வேண்டாம். அப்படித்தான் சொல்வார்கள். கவனமாக இருங்கள் என்றார். கபாலியை உலகமெங்கும் கொண்டாடுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் பேசினார்," என்றார்.


English summary
Director Ranjith says that Superstar Rajini has blessed him with a kiss on his forehead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil