»   »  ராணுவ வீரன் ரஜினி - புகையிலை வாய் ஸ்ரீதேவி... மறக்க முடியுமா அந்த ரொமான்ஸை! RajinikanthSridevi

ராணுவ வீரன் ரஜினி - புகையிலை வாய் ஸ்ரீதேவி... மறக்க முடியுமா அந்த ரொமான்ஸை! RajinikanthSridevi

Posted By:
Subscribe to Oneindia Tamil
நேத்துனு பார்த்து ஸ்ரீதேவியின் கணவர் கொடுத்த சர்பிரைஸ் | Oneindia Tamil

ராணுவ வீரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதேவியின் பாத்திரம் யாராலும் மறக்க முடியாதது.

தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் எண்பதுகளில் நிலவிய நக்சலைட் பயங்கரவாத சம்பவங்களை மையமாக

வைத்து உருவான படம் ராணுவ வீரன்.

Rajini - Sridevi's unforgattable romemance in Raanuva Veeran

அன்றைக்கு முதல்வராக இருந்த அமரர் எம்ஜிஆர் ஆசியுடன், ஆர்எம் வீரப்பன் தனது சத்யா மூவீஸ்

நிறுவனத்தின் பேனரில் தயாரித்த படம் ராணுவ வீரன். இந்தப் படத்தில் ராணுவ வீரன் ரஜினிக்கு ஜோடியாக

ஸ்ரீதேவி நடித்திருந்தார்.

Rajini - Sridevi's unforgattable romemance in Raanuva Veeran

படிக்காத, சண்டை சேவலுக்கு சொந்தக்காரியாக ஸ்ரீதேவி நடித்திருப்பார். பாவாடை, சட்டையுடன் வாயில்

புகையிலையைக் குதப்பியடி அவர் தோன்றும் காட்சிகள் ரசிகர்களைக் கிறங்கடித்தன. இத்தனைக்கும் இந்தப் படம் நாயகனுக்கு முக்கியத்துவம் தந்த படம். ஸ்ரீதேவியின் பாத்திரம் ஒரு மசாலாதான். ஆனால் அதிலும் அந்தப் பாத்திரமாகவே மாறி, ரசிகர்களைக் குஷிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதேவி.

ஒரு காட்சியில், ரஜினி ஸ்ரீதேவியைச் சீண்டியபடி பாடும் 'சொன்னால்தானே தெரியும்... என்னைக் கண்ணால் பாரு புரியும்' பாடல் எத்தனை முறை கேட்டாலும், பார்த்தாலும் சலிக்காதது.

"கோழியும் இங்கே சேவலும் இங்கே
குடும்பத்தைப் பார் இங்கே
ஜோடிகள் இன்றி பறவைகள் கூட
வாழ்வதுதான் எங்கே

பறவையின் நிலைவேறு
மனிதனின் கதைவேறு...

மனிதர்கள் இனம் போலே
பறவைகள் கடமையை அறியாது..."

கவிஞர் வாலியின் வரிகளுக்கு ரஜினியும் ஸ்ரீதேவியும் அத்தனை அற்புதமாக நடித்திருப்பார்கள் இந்தப் பாடலில்.

English summary
Rajini - Sridevi's unforgattable romemance in Raanuva Veeran is still looks live

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil