»   »  கபாலி டப்பிங்கைத் தொடங்கினார் ரஜினி!

கபாலி டப்பிங்கைத் தொடங்கினார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் டப்பிங் வேலைகள் நேற்று தொடங்கின. இதில் ரஜினி நேற்று பங்கேற்று, டப்பிங் பேசினார்.

பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வருகிறது கபாலி. பா ரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தை கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.


ரஜினியுடன் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன், ரித்விகா, ஜான் விஜய் மற்றும் மலேசிய, சீன நடிகர்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


சென்னை, கோவா, மலேசியா, தாய்லாந்து போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.


டப்பிங்

டப்பிங்

இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணியை நேற்று ரஜினி தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக '2.0' படப்பிடிப்பில் இருந்தஅவர், தற்போது அந்த படத்திற்கு சிறு ஓய்வு கொடுத்துவிட்டு, கபாலி டப்பிங் பணியை மேற்கொண்டார்.


வரவேற்பு

வரவேற்பு

டப்பிங் பேச வந்த அவரை இயக்குநர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.


மீண்டும் 2.O

மீண்டும் 2.O

இன்னும் ஓரிரு தினங்களில் ‘கபாலி' டப்பிங்கை முடித்துவிட்டு, மீண்டும் ‘2.O' படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொள்ளவிருக்கிறார்.


ஜூனில் ரிலீஸ்

ஜூனில் ரிலீஸ்

ஜூன் இரண்டாவது வாரம் கபாலி வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கு முன் இம்மாத இறுதியில் படத்தின் ட்ரைலரை வெளியிடத் திட்டமிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு.


English summary
Rajinikanth has started the dubbing of his forthcoming release Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil