»   »  புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன ராஜா-மந்திரி கதை இதுதான்!

புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன ராஜா-மந்திரி கதை இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி, ஆன்மீகத்தின் முக்கியத்துவம் குறித்த ராஜா, மந்திரி கதை ஒன்றைக் கூறினார்.

சென்னை கோடம்பாக்கத்தில் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற 'பரமஹம்ச யோகானந்தரின் தெய்வீக காதல்' புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார்.

Rajini tell a story in book release

இதைத் தொடர்ந்து ரஜினி கூறிய குட்டிக் கதை, ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தாரார். அவருக்கு நிர்வாகத்தில் உறுதுணையாக ஒரு மந்திரி ஒருவரும் இருந்தார். அதிபுத்திசாலியான மந்திரிக்கு சகல வசதிகளையும் ராஜா செய்து கொடுத்தார். ராஜாவுக்கு இணையான உரிமைகளும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.

ஒருநாள் ராஜாவை சந்தித்த மந்திரி, தான் ஆன்மீகத்தில் ஈடுபடப்போவதாகவும், அதனால் பதவியைத் துறந்து இமயமலை நோக்கி துறவறம் செல்ல இருப்பதாகவும் கூறினார். அவரின் கோரிக்கையைக் கேட்டு வருத்தம் அடைந்த ராஜா, பணம், புகழ் எல்லாம் இருந்தும் ஏன் செல்கிறீர்கள் என கேட்டார்.

இருப்பினும் முழுமனது இல்லாவிட்டாலும் மந்திரியின் கோரிக்கையை ஏற்று அவரை அனுப்பி வைத்தார். சில ஆண்டுகளுக்குப் பின்னர் சந்நியாசியாக அந்த நாட்டுக்கு மீண்டும் திரும்பி வந்தார் மந்திரி. ஊருக்கு வெளியில் சிறிய குடிசை ஒன்றை அமைத்துத் தங்கியிருந்தார் மந்திரி. இதை கேள்விப்பட்ட ராஜா,

அவரைப் பார்ப்பதற்காக நேரில் சென்ற ராஜா, ஏன் இத்தனை வசதிகளையும் விட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டீர்கள்?. இதனால் நீங்கள் சாதித்தது என்ன? என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த சந்நியாசியான மந்திரி, மன்னா நான் மந்திரியாக இருந்தபோது நீங்கள் உட்கார்ந்து கொண்டிருப்பீர்கள். தற்போது நீங்கள் நின்று கொண்டிருக்கிறீர்கள். நான் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன் இதைவிட வேறென்ன சாதனை செய்துவிட முடியும் என்று கேட்டார். அதுதான் ஆன்மீகத்தின் சக்தி என்று ரஜினி கதையைக் கூறி முடித்தார்.

English summary
Actor Rajinikanth tell a story in book release function

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil