»   »  சவுந்தர்யா விவாகரத்து: ரஜினி எவ்வளவோ முயன்றும் ஒன்னும் முடியலையே!

சவுந்தர்யா விவாகரத்து: ரஜினி எவ்வளவோ முயன்றும் ஒன்னும் முடியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுந்தர்யா தனது கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ ரஜினிகாந்த் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தான் காதலித்த அஸ்வின் ராம்குமாரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு சவுந்தர்யா திரைப்பட இயக்குனர் ஆனார்.

இதற்கிடையே சவுந்தர்யா, அஸ்வினின் திருமண வாழ்க்கை கசக்கத் துவங்கியது.

பிரச்சனை

பிரச்சனை

சவுந்தர்யாவுக்கும், அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பேசிக் கொள்ளாமல் இருந்தனர். இதை பார்த்த ரஜினிகாந்த் அவர்கள் வீட்டில் தங்கி இருவருடனும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அடம்

அடம்

சவுந்தர்யா தனது கணவரை பிரிவது என்ற முடிவில் இருந்து மாறவில்லை. இதையடுத்து ரஜினிகாந்த் தனது நண்பர்களிடமும் கூறி சவுந்தர்யாவிடம் பேச வைத்தார் என்று கூறப்பட்டது.

சவுந்தர்யா

சவுந்தர்யா

சவுந்தர்யா தனது மகன் வேதை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். சமாதான பேச்சுவார்த்தைகளின் முடிவில் அஸ்வின் சவுந்தர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்தார்.

விவாகரத்து

விவாகரத்து

அஸ்வின் மீண்டும் சேர்ந்து வாழ சம்மதித்தாலும் அவரை ஏற்க சவுந்தர்யா தயாராக இல்லை என்று ரஜினிக்கு நெருக்கமானவர்களே தெரிவித்தனர். இந்நிலையில் சவுந்தர்யா விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

English summary
Rajinikanth tried his level best to save his younger daughter Soundarya's marriage but it is of no use as she has filed for divorce.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil