»   »  விஜயகாந்த் மகனின் சகாப்தம் பட ஆடியோவை வெளியிடுகிறார் ரஜினி?

விஜயகாந்த் மகனின் சகாப்தம் பட ஆடியோவை வெளியிடுகிறார் ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜயாந்த்தின் மகன் சண்முகப் பாண்டியன் நடித்துள்ள சகாப்தம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜனவரி 31ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேசட்டை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த் இளையமகன்

விஜயகாந்த் இளையமகன்

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கும் 'சகாப்தம்' திரைப்படத்தின் மூலம் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

மிஸ் இந்தியா

மிஸ் இந்தியா

நேஹா இன்ஞ் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் 2010ம் ஆண்டு மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டம் வென்றவர். புதுமுகம் சுப்ரா 2வது ஹீரோயினாக நடிக்கிறார்.

விஜயகாந்த்

விஜயகாந்த்

ரஞ்சித், தேவயானி, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தில் விஜயகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார்.

ஆடியோ உரிமை

ஆடியோ உரிமை

சுரேந்தர் இயக்கும் இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஆடியோ உரிமையை கூலிக்காரன், அண்ணாமலை, ரோஜா, காதலன், ஜென்டில்மேன் ஆகிய வெற்றிப்படங்களின் ஆடியோ உரிமையை வாங்கிய லகரி ஆடியோ நிறுவனம் கடும் போட்டிகளுக்கிடையே 42 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

சிம்பு, ரம்யா நம்பீசன், ஆண்ட்ரியா பாடிய 'அடியே ரதியே' என்ற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வரும் ஜனவரி 31ம் தேதி 'சகாப்தம்' படத்தின் இசை வெளியிடப்பட உள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காதலர் தினத்தில்

காதலர் தினத்தில்

காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம் தேதி 'சகாப்தம்' படம் ரிலீஸ் ஆகிறது. கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'அனேகன்' படம் பிப்ரவரி 13 ஆம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தனுசுடன் மோத இருக்கிறார் சண்முகபாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The audio of 'Sagaptham', a film which marks the debut of Vijayakanth's younger son Shanmugapandian, will be launched in Chennai soon. If sources are to be believed, Superstar Rajinikanth would be the chief guest of the music release function, which would be held in a grand manner.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil